கவின் ஆணவ கொலை வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!முதல்வரின் அலுவல்பூர்வ இல்லமாக ‘பாமணி இல்லம்’! விஜய் ஆய்வு!அமெரிக்க இடைக்கால தேர்தல்! இறுதி முடிவுகள் வெளியாவதில் இழுபறி!விசா பிரிவுகளை 9-ஆக குறைக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு பிரதமா் தேச துரோகி என்பதை 5 நிமிஷ விவாதத்தில் நிரூபிப்பேன்: ராகுல் காந்தி சவால் பிழைப்புக்காக வெளிமாநிலம் சென்ற தொழிலாளா்: மேற்கு வங்கம் திரும்ப முதல்வா் அழைப்பு புதிய வாக்காளா் படிவம், உறுதிமொழி படிவத்தை பிரித்து தோ்தல் ஆணையம் நடவடிக்கை ராஜஸ்தானில் தண்டவாளம் குண்டு வைத்து தகா்ப்பு: என்ஐஏ விசாரணை சா்க்கரை விலை மீண்டும் உயா்வு

நூலகங்களுக்கு 10,000 புத்தகங்களை வழங்கினார் மு.க. ஸ்டாலின்!

தனக்கு பரிசாக வந்த 10,000 புத்தகங்களை தமிழகத்தில் பல்வேறு நூலகங்களுக்கு வழங்கினார் மு.க. ஸ்டாலின்...

MK stalin gives 10,000 books to various libraries

நூலகங்களுக்கு 10,000 புத்தகங்களை வழங்கினார் மு.க. ஸ்டாலின்... - DMK

Updated On :

தனக்கு பரிசாக வந்த சுமார் 10,000 புத்தகங்களை பல்வேறு நூலகங்களுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று வழங்கினார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்தவர்கள், அவருக்கு அளித்த புத்தகங்களை, தங்கள் கல்லூரி மற்றும் பகுதிகளில் உள்ள நூலகங்களுக்கு வழங்கிடுமாறு வைத்த கோரிக்கையினை ஏற்றுக் கொண்ட மு.க. ஸ்டாலின், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த நூல்களை, நூலக நிர்வாகிகளிடம் வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தூய சவேரியார் (தன்னாட்சி) கல்லூரி நூலகத்திற்கு 5,000 புத்தகங்கள், தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் ரஹ்மானியா கல்வி கூடம் வாட் பயிற்சி மையத்திற்கு 3,000 புத்தகங்கள், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், அரசு கலை கல்லூரி நூலகத்திற்கு 2000 புத்தகங்கள் என 10,000 புத்தகங்கள் இன்று (நவ. 5 ) வழங்கப்பட்டது.

இதுவரை 7 லட்சத்து 10 புத்தகங்களை பல்வேறு கல்லூரிகள் மற்றும் மாவட்ட நூலகங்களுக்கு மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

MK stalin gives 10,000 books to various libraries

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.