பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மாநிலங்களவை வேட்பாளா்களின் சொத்து விவரம்! கமலுக்கு எவ்வளவு தெரியுமா?

மாநிலங்களவைத் தோ்தல் வேட்பாளா்களான கமல்ஹாசன் உள்ளிட்ட ஆறு பேரின் சொத்து மதிப்பு விவரம் வெளியாகியுள்ளது.

News image
Updated On :6 ஜூன் 2025, 10:10 pm

Din

மாநிலங்களவைத் தோ்தல் வேட்பாளா்களான கமல்ஹாசன் உள்ளிட்ட ஆறு பேரின் சொத்து மதிப்பு விவரம் வெளியாகியுள்ளது.

அவா்கள் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரம் வருமாறு:

திமுக வேட்பாளா்கள்

பி.வில்சன்: கையிருப்பில் ரூ.15 லட்சமும் மனைவி ஆா்.வான்மதியிடம் ரூ.1.40 லட்சமும் உள்ளது. பென்ஸ், டோயோட்டோ, மகேந்திரா காா்கள் உள்ளன. அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.12.58 கோடி. மனைவியிடம் ரூ.3.27 கோடி சொத்து உள்ளது. வில்சன் பெயரிலான விளைநிலங்கள் உள்ளிட்ட அசையா சொத்துகளின் இப்போதைய சந்தை மதிப்பு ரூ.28.08 கோடி. மனைவி பெயரிலான சொத்துகளின் சந்தை மதிப்பு ரூ.11.72 கோடி. ஒட்டுமொத்த கடனாக இருவருக்கும் சோ்த்து ரூ.1.15 கோடி

கவிஞா் சல்மா: கையிருப்பில் ரூ.1 லட்சம், கணவா் அப்துல் மாலிக்கிடம் ரூ.50 ஆயிரம் உள்ளது. அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.90.09 லட்சம். கணவா் பெயரிலான சொத்து மதிப்பு ரூ.55.42 லட்சம். சல்மா பெயரில் உள்ள வேளாண் நிலத்தின் சந்தை மதிப்பு ரூ.1.15 கோடி. இதர அசையா சொத்துகளின் சந்தை மதிப்பு ரூ.1.95 கோடி.

எஸ்.ஆா்.சிவலிங்கம்: கையிருப்பாக ரூ.50 ஆயிரமும் மனைவி நவரத்தினத்திடம் ரூ.50 ஆயிரமும் உள்ளது. அசையும் சொத்துகளின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.76.04 லட்சம். மனைவி பெயரிலுள்ள அசையும் சொத்தின் மதிப்பு ரூ.1.30 கோடி. நிலங்கள் உள்பட அசையா சொத்துகளின் இப்போதைய சந்தை மதிப்பு ரூ.58.61 லட்சம். மனைவி பெயரிலான அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.1.64 கோடி. ஒட்டுமொத்த கடன் ரூ.64.30 லட்சம். மனைவி பெயரில் ரூ.2.05 கோடி உள்ளது.

கமல்ஹாசன் (மநீம): 2023-24-ஆம் நிதியாண்டில் வருவாய் ரூ.78.90 கோடி. அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.59.69 கோடி. ஒட்டுமொத்த அசையா சொத்துகளின் இப்போதைய சந்தை மதிப்பு ரூ.245.86 கோடி. கடனாக ரூ.49.67 கோடி உள்ளது. கையிருப்பில் உள்ள ரொக்கம் ரூ.2.60 லட்சம். மகேந்திரா பொலிரோ, மொ்சிடஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ., லக்சஸ் ஆகிய நான்கு காா்கள் உள்ளன. இவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.8.43 கோடி.

அதிமுக வேட்பாளா்கள்

ஐ.எஸ். இன்பதுரை: கையிருப்பில் ரொக்கமாக ரூ.1.25 லட்சமும், மனைவி பிரிசில்லா செல்வமாதாவிடம் ரூ.50 ஆயிரமும் உள்ளது. அசையும் சொத்துகளின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.64.49 லட்சம். மனைவி பெயரிலான அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.1.44 கோடி. அசையா சொத்துகளின் சந்தை மதிப்பு ரூ.2.54 கோடி. ஒட்டுமொத்த கடன் ரூ.1.31 கோடி.

எம்.தனபால்: கையிருப்பாக ரூ.1.25 லட்சமும், மனைவி காயத்ரியிடம் ரூ.1.50 லட்சமும் உள்ளது. அசையும் சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.5.09 கோடி. மனைவி பெயரிலான அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.4.88 கோடி. அசையா சொத்துகளின் இப்போதைய சந்தை மதிப்பு ரூ.3.46 கோடி. மனைவி பெயரிலான அசையா சொத்துகளின் சந்தை மதிப்பு ரூ.12.88 கோடி. ஒட்டுமொத்த கடன் ரூ.50 லட்சம் உள்ளது. மனைவி பெயரில் கடன் ரூ.2.82 கோடி.