வீட்டுக்குள் இருக்கவே அச்சமடையும் நிலையில் மக்கள்; இதுதான் தவெகவின் சாதனையா? - மு.க. ஸ்டாலின்இனி நிரந்தர அரசுப் பணிகள் இல்லையா? - கனிமொழி கேள்விதேனி சிறைச் சம்பவம்! 1995-ல் சுரங்கம் தோண்டி தப்பிய 43 கைதிகள்! புரட்டப்படும் வரலாறு!நாட்டில் ஆப்பிள் ஐபோன் விற்பனை 30% சரிவு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!ரிலையன்ஸ் முதல் ஐடி பங்குகள் வரை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!!

சந்தை மதிப்பில் ரிலையன்ஸ் ஆதிக்கம்: டாடா குழுமத்தை முந்தி முதலிடம் பிடித்த ரிலையன்ஸ்!

டாடா குழுமத்தை முந்தி, ரிலையன்ஸ் குழுமம் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனக் குழுமமாக உருவெடுத்தது.

ரிலையன்ஸ் குழுமம்

Updated On :

மும்பை: ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட், பட்டியலிடப்பட்ட முதல் நாளிலே பிரம்மாண்டமான அறிமுகத்தைப் பெற்ற நிலையில், சந்தை மூலதன மதிப்பில் டாடா குழுமத்தை முந்தி, ரிலையன்ஸ் குழுமம் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனக் குழுமமாக உருவெடுத்தது.

டிஜிட்டல் சேவை நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் பங்குகள், பட்டியலிடப்பட்ட முதல் நாளிலே பிரம்மாண்டமான அறிமுகத்தைப் பெற்றது. மும்பை பங்குச் சந்தை மற்றும் நிஃப்டி-யில் இந்தப் பங்கு ரூ. 1,119 என்ற வெளியீட்டு விலையிலிருந்து 21.36% உயர்ந்து ரூ.1,358் ஆக வர்த்தகத்தைத் தொடங்கியது.

மும்பை பங்குச் சந்தையில், இந்த பங்கு வெளியீட்டு விலையிலிருந்து 26.66 சதவீதம் உயர்ந்து ரூ.1,417.35 ஆக முடிவடைந்தது. இந்தப் பங்கு 27.23 சதவீதம் உயர்ந்து, அதன் இன்றைய உச்சபட்ச விலையான ரூ.1,423.80 ஐ எட்டியது.

நிஃப்டி-யில் இந்தப் பங்கு 26.67 சதவீதம் உயர்ந்து ரூ. 1,417.50 ஆக முடிவடைந்தது. பகல்நேர வர்த்தகத்தில் இது 27.24 சதவீதம் உயர்ந்து ரூ. 1,423.90 ஆக இருந்தது. இதனையடுத்து நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 13 லட்சம் கோடியாக இருந்தது.

வர்த்தகம் முடிவடைந்த நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் சந்தை மதிப்பு ரூ. 15.67 லட்சம் கோடியாகவும், ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் சந்தை மதிப்பு ரூ. 13 லட்சம் கோடியாகவும், ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸின் சந்தை மதிப்பு ரூ. 1.35 லட்சம் கோடியாகவும் இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் தரவுகளின் அடிப்படையில், ரிலையன்ஸ் குழுமத்தின் ஒருங்கிணைந்த சந்தை மதிப்பு ரூ. 30 லட்சம் கோடியாக உள்ளது.

மறுபுறம் டிசிஎஸ், டாடா ஸ்டீல், டைட்டன், டாடா பவர், டாடா மோட்டார்ஸ் பேசஞ்சர் வெஹிக்கிள்ஸ் மற்றும் டிரென்ட் உள்ளிட்ட டாடா குழும நிறுவனங்களின் ஒருங்கிணைந்த சந்தை மதிப்பு ரூ. 25.28 லட்சம் கோடியாக உள்ளது.

Summary

Reliance Group the biggest conglomerate by market valuation overtaking the Tata Group.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.