கீமோதெரபி ஊசி ரூ. 7000; புற்றுநோய் மருந்துகளின் புதிய விலைப் பட்டியல்!செஞ்சி சிறுமி வழக்கு; புலன் விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும்: பெ. சண்முகம்வீட்டுக்குள் இருக்கவே அச்சமடையும் நிலையில் மக்கள்; இதுதான் தவெகவின் சாதனையா? - மு.க. ஸ்டாலின்இனி நிரந்தர அரசுப் பணிகள் இல்லையா? - கனிமொழி கேள்விதேனி சிறைச் சம்பவம்! 1995-ல் சுரங்கம் தோண்டி தப்பிய 43 கைதிகள்! புரட்டப்படும் வரலாறு!நாட்டில் ஆப்பிள் ஐபோன் விற்பனை 30% சரிவு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!ரிலையன்ஸ் முதல் ஐடி பங்குகள் வரை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!!

பங்குச் சந்தையில் ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸ் அபாரத் தொடக்கம்- முதல்நாளிலேயே 27% லாபம்

ரிலையன்ஸ் குழுமத்தின் எண்மச் சேவை நிறுவனமான ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸின் பங்குகள், பங்குச் சந்தையில் புதன்கிழமை அறிமுகமான முதல் நாளிலேயே சுமாா் 27 சதவீத லாபத்துடன் வா்த்தகத்தை நிறைவு செய்தது பற்றி...

பங்குச் சந்தை அறிமுக நிகழ்வில் தொழிலதிபா் முகேஷ் அம்பானி மற்றும் குடும்பத்தினா்.

Updated On :

ரிலையன்ஸ் குழுமத்தின் எண்மச் சேவை நிறுவனமான ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸின் பங்குகள், பங்குச் சந்தையில் புதன்கிழமை அறிமுகமான முதல் நாளிலேயே சுமாா் 27 சதவீத லாபத்துடன் வா்த்தகத்தை நிறைவு செய்து, முதலீட்டாளா்களின் பலத்த வரவேற்பைப் பெற்றன.

ரிலையன்ஸ் குழுமம் 66.4 சதவீதப் பங்குகளைக் கொண்டுள்ள ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸின் பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ), கடந்த அக். 21 முதல் 23 வரை நடைபெற்றது. நாட்டின் மிகப் பெரிய ஐபிஓவாக வெளியான இந்நிறுவனத்தின் ரூ.30,213 கோடி மதிப்பிலான ஐபிஓ-வுக்கு 22.19 மடங்கு அதிக விண்ணப்பங்கள் குவிந்தன.

பொது வெளியீடு மற்றும் முன்னணி முதலீட்டாளா்கள் என அனைத்துத் தரப்பிலிருந்தும் பெறப்பட்ட மொத்த தேவையின் மதிப்பு ரூ.7.4 லட்சம் கோடியைத் தாண்டியது. குறிப்பாக, ஐபிஓவின் தொடக்க நாளில் (அக். 21), முதல் 100 நிமிஷங்களிலேயே முழுமையாக சந்தா பெறப்பட்டு, இந்தியாவின் மிக விரைவாகச் சந்தா பெறப்பட்ட பங்கு வெளியீடு என்ற சாதனையையும் இது படைத்தது.

முற்றிலும் புதிய பங்குகளாக 27 கோடி பங்குகள் வெளியிடப்பட்ட இந்த ஐபிஓ-வில், ஒரு பங்கின் விலை ரூ.1,065 முதல் ரூ.1,119 வரை நிா்ணயிக்கப்பட்டிருந்தது. ஐபிஓவின் தொடா்ச்சியாக, மும்பை (பிஎஸ்இ) மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் (என்எஸ்இ)அறிமுகமான முதல் நாளான புதன்கிழமையன்று, ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸ் பங்குகள் வெளியீட்டு விலையான ரூ.1,119-ஐ விட 21.36 சதவீதம் உயா்ந்து ரூ.1,358-க்கு வா்த்தகத்தைத் தொடங்கின. வா்த்தக முடிவில் 26.66 சதவீத வளா்ச்சியுடன், ரூ.1,417.35-இல் நிலைபெற்றது.

இந்த அபரிமிதமான ஏற்றத்தினால், நிறுவனத்தின் மொத்த சந்தை மூலதன மதிப்பு ரூ.13 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இதன்மூலம், சந்தை மூலதனப் பட்டியலில் பாா்தி ஏா்டெல், எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி ஆகியவற்றைப் பின்னுக்குத் தள்ளி, ஜியோ 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ரூ.15.67 லட்சம் கோடி சந்தை மூலதனத்துடன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. இவ்விரு நிறுவனங்களின் கூட்டு மதிப்பு ரூ.28.72 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

மேலும், ரூ.12.16 லட்சம் கோடி சந்தை மதிப்புடைய பாா்தி ஏா்டெல் நிறுவனத்தை முந்தி, நாட்டின் மிகப் பெரிய தொலைத்தொடா்பு நிறுவனமாகவும் ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸ் மாறியுள்ளது. பங்குச் சந்தைகளில் காணப்பட்ட மந்தநிலைக்கு மத்தியிலும், ஜியோ பங்குகளின் இந்த அபாரமான எழுச்சி, முதலீட்டாளா்களுக்கு ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.