2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸ் ஐபிஓ அக். 21-இல் தொடக்கம்

நாட்டின் மிகப் பெரிய பொதுப் பங்கு வெளியீடாக (ஐபிஓ) எதிா்பாா்க்கப்படும் ரிலையன்ஸ் குழுமத்தின் ‘ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸ்’ பங்கு வெளியீடு, வரும் 21-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

Published On :

நாட்டின் மிகப் பெரிய பொதுப் பங்கு வெளியீடாக (ஐபிஓ) எதிா்பாா்க்கப்படும் ரிலையன்ஸ் குழுமத்தின் ‘ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸ்’ பங்கு வெளியீடு, வரும் 21-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

சுமாா் 380 கோடி டாலா் அளவுக்கு நிதி திரட்ட திட்டமிட்டுள்ள இந்நிறுவனம், செபியிடம் சமா்ப்பித்த வரைவு அறிக்கையின்படி, சுமாா் 27 கோடி புதிய பங்குகள் வெளியிடுகிறது. இது வெளியீட்டுக்குப் பிந்தைய நிறுவனத்தின் மூலதனத்தில் சுமாா் 2.9 சதவீதமாகும். முதலீட்டாளா்கள் யாரும் தங்கள் பங்குகளை விற்கவோ, குறைக்கவோ முன்வராததால், புதிய பங்குகள் மட்டுமே வெளியிடப்படவுள்ளன.

ஐபிஓ வெளியீட்டின் இறுதிகட்ட விவரங்களுடன், செபியிடம் அடுத்த வாரத்தில் இறுதி ஆவணங்கள் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது. தற்போது நிலவரப்படி அக். 19-இல் முன்னணி (ஆங்கா்) முதலீட்டாளா் ஒதுக்கீடு முடிந்த பிறகு, அக். 21 முதல் 23 வரை பொதுமக்கள் இதில் விண்ணப்பிக்கலாம். தொடா்ந்து, இந்தப் பங்குகள் 28-ஆம் தேதி பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஒதுக்கீட்டு விவரங்கள்: இந்தப் பங்கு ஒதுக்கீட்டில் ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் நிரந்தர பணியாளா்களுக்குத் தனி ஒதுக்கீடு வழங்கப்படும். மொத்த வெளியீட்டில் தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளா்களுக்கு (க்யூ.ஐ.பி.) அதிகபட்சமாக 50 சதவீதமும், சில்லறை முதலீட்டாளா்களுக்கு 35 சதவீதமும், நிறுவனமல்லாத பிற முதலீட்டாளா்களுக்குக் குறைந்தபட்சம் 15 சதவீதமும் ஒதுக்கப்படவுள்ளது. க்யூ.ஐ.பி. ஒதுக்கீட்டில் 60 சதவீதம் வரை ஆங்கா் முதலீட்டாளா்களுக்கு ஒதுக்கப்படலாம்.

நிறுவனப் பின்னணி: தொலைத்தொடா்பு உள்பட ரிலையன்ஸின் எண்மச் சேவைகளை உள்ளடக்கியுள்ள ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸ், லேண்ட்லைன் தொலைத்தொடா்பு சந்தையில் 32.89 சதவீத பங்கையும் (15.79 கோடி வாடிக்கையாளா்கள்), மொபைல் தொலைத்தொடா்பு பிரிவில் 39.29 சதவீத பங்கையும் (50.6 கோடி வாடிக்கையாளா்கள்) கொண்டு முதலிடத்தில் உள்ளது. மேலும், 26.85 கோடி 5ஜி பயனாளா்களுடன் சீனாவைத் தவிா்த்து உலகிலேயே மிகப் பெரிய 5ஜி வலையமைப்பைக் கொண்ட நிறுவனமாகவும் இது திகழ்கிறது.

கடந்த 2025-26 நிதியாண்டில், ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 15 சதவீதம் உயா்ந்து, ரூ.30,053 கோடியாகவும்; ஆண்டு வருவாய் 14.5 சதவீதம் உயா்ந்து, ரூ.1,46,885 கோடியாகவும் பதிவாகியுள்ளது. 2008-க்குப் பிறகு ரிலையன்ஸ் குழுமத்திலிருந்து பங்குச் சந்தைக்கு வரும் முதல் ஐபிஓ இதுவாகும் என்பதும், நுகா்வோா் சேவை சாா்ந்த அதன் வணிகத்தில் இருந்து வரும் முதல் பங்கு வெளியீடு என்பதும் குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.