ஒர்னாப் புயல் முழுமையாக கரையைக் கடந்து வலுவிழக்க தொடங்கியது!முதல்வருக்கு கொலை மிரட்டல்: வேலூர் திமுக கவுன்சிலர் கைது!காவலர்களைத் தாக்கிவிட்டு தப்ப முயலும் கைதிகளை சுட்டுப்பிடிக்க உத்தரவு!அஇபுதமமுக-விலிருந்து சசிகலா அதிரடி நீக்கம்: கட்சித் தலைவர் அறிவிப்பு!சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிய திருத்தம்: தமிழக அரசு அரசாணை!தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புசெயற்கைகோள் ஏவப்பட உள்ளதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடைஆவின் பால் உபபொருள்கள் விலை: இன்றுமுதல் உயா்வுமுதல்வருக்கு கொலை மிரட்டல்: திமுக கவுன்சிலா் மீது 4 பிரிவுகளில் வழக்கு

முதல் நாளில் 21.36% லாபம்... இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜியோ பிளாட்ஃபார்ம் பங்குகள்!

பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்ட ஜியோ பிளாட்ஃபார்ம் பங்குகள் அறிமுக நாளில் ஏறுமுகத்துடன் தொடங்கியுள்ளதைப் பற்றி...

பங்குச்சந்தை.

பங்குச்சந்தை. - கோப்புப்படம்

Updated On :

பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்ட ஜியோ பிளாட்ஃபார்ம் பங்குகள் தொடக்க நாளில் ஏறுமுகத்துடன் தொடங்கியுள்ளன.

இந்தியாவின் முன்னணி பணக்காரர்களின் ஒருவரான ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் ஜியோ ஃபிளாட்பார்ம் நிறுவனம் முதல்முறையாக பொதுப் பங்குகளை வெளியிட்டது. ரூ. 30,213 கோடி நிதி திரட்ட திட்டமிடப்பட்டு ஒரு பங்குக்கான விலைவரம்பாக ரூ.1,065 முதல் ரூ.1,119 வரை நிா்ணயிக்கப்பட்டது. உச்ச விலைவரம்பில் ஒரு லாட் (12) பங்குகளின் மதிப்பு ரூ. 13,428 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

தகுதிவாய்ந்த ஜியோ பணியாளர்களுக்கு ரூ.500 கோடி மதிப்பிலும், அக். 14 ஆம் தேதி நிலவரப்படி உள்ள ரிலையன்ஸ் பங்குதாரர்களுக்கு ரூ.2,500 கோடி மதிப்பிலும் பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த ஐபிஓ வெளியீடு, பொது முதலீட்டாளர்களுக்காக புதன்கிழமை (அக். 21) திறக்கப்பட்டு, வெள்ளிக்கிழமையுடன் (அக். 23) நிறைவடைந்தது.

பங்குகளின் விற்பனை தொடங்கிய வெறும் 100 நிமிடங்களில் முழுமையாக விற்பனையாகி புதிய சாதனை படைத்த நிலையில் முதல் நாளின் முடிவில் ஒட்டுமொத்தமாக 3.01 மடங்கு (ரூ.66,500 கோடி அளவுக்கு) விண்ணப்பங்கள் குவிந்தன. வரவேற்கப்பட்ட 19.75 கோடி பங்குகளுக்கு, 59.44 கோடி பங்குகள் அளவுக்கு முதலீட்டாளர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

இந்த நிலையில், பங்குச்சந்தைகளில் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் பங்குகள் புதன்கிழமை (அக். 28) காலை 10 மணி அளவில் பட்டியலிடப்பட்டன. ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி முன்னிலையில் ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானி ஆகியோர் மணி அடித்து தொடங்கி வைத்தனர்.

பங்குகளைப் பெறுவதற்கு கடும் போட்டி நிலவிய நிலையில், ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் பங்குகள் இந்திய பங்குச்சந்தையில் வலுவான அறிமுகத்தைப் பெற்றன.

மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தையில் ஒரு ஜியோவின் பங்கு ரூ.1,359 என்ற விலையில் பட்டியலிடப்பட்டது.

ஒரு பங்கின் ஐபிஓ விலையான ரூ.1,119-ஐவிட 21.36% கூடுதல் லாபத்தை ஈட்டியுள்ளது. ஜியோ பங்குகள் முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்கிற்கு ரூ. 239 வரையில் லாபத்தை ஈட்டித்தந்துள்ளன.

ஜியோ ஐபிஓ ரூ. 10.3 லட்சம் கோடியில் பட்டியலிடப்பட்ட நிலையில், 21 சதவிகித ப்ரீமியம் விலை லிஸ்டிங் மூலம் ஜியோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 12.6 லட்சம் கோடி வரையில் உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம் திட்டமிட்டபடி ஐபிஓ வாயிலாக ரூ.30,213 கோடி முதலீட்டை திரட்டி இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ-வாக உருவெடுத்துள்ளது.

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் ரூ. 27,870 கோடி அளவில் ஐபிஓவை வெளியிட்டு சாதனை படைத்திருந்த நிலையில் அதை தகர்த்து ஜியோ புதிய சாதனை படைத்துள்ளது.

Summary

Shares of Jio Platforms made a strong debut on the stock exchanges on Wednesday, listing at Rs 1,359 apiece on the BSE and NSE. This marks a premium of 21.36% over the IPO price of Rs 1,119 per share.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.