தொகுதி மறுசீரமைப்புக்கு நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்: இபிஎஸ்

தொகுதி மறுசீரமைப்பு பற்றி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பதிவு பற்றி...
EPS tweet on Delimitation
எடப்பாடி பழனிசாமி (கோப்புப்படம்)DIN
Published on
Updated on
1 min read

தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும் சூழல் வந்தால் அதனை எதிர்க்கும் முதல் குரல் என்னுடையதாகத்தான் இருக்கும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

தமிழகம் இதுவரை கண்டிராத மிகவும் அநியாயமான, ஊழல் நிறைந்த, குடும்ப ஆட்சி நடத்தும் முதல்வர், தொகுதி மறுசீரமைப்புப் பற்றிப் பேசுகிறார்.

டாஸ்மாக்கில் நடந்த ஊழல், போதைப்பொருள் மாஃபியா, சட்டவிரோத மதுபான விற்பனை, ரௌடியிசம் பற்றியெல்லாம் முதல்வர் முதலில் பேசட்டும்.

தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறைக்கப்படவோ நமது குரல் அடக்கப்படவோ நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்பதை ஒவ்வொரு தமிழருக்கும் நான் உறுதி அளிக்கிறேன்.

முதல்வரே, உங்கள் தோல்விகளையும் மோசடிகளையும் மறைக்க தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தைப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள். உங்கள் நாடகத்தாலும் முதலைக் கண்ணீராலும் தமிழக மக்கள் சோர்வடைந்துவிட்டனர்.

தொகுதி மறுசீரமைப்பு எப்போது நடந்தாலும் அதில் தமிழ்நாட்டின் உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதை மத்திய உள்துறை அமைச்சரைச் சந்தித்தபோதே தெரிவித்தது நான்.

என் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும் சூழல் வந்தால், அதனை எதிர்க்கும் முதல் குரல் என்னுடையதாகத்தான் இருக்கும்!

கூட்டணி அறிவிக்கையின்போதே அடிமை சாசனமும் எழுதிக் கொடுக்கும் கட்சிகள் திமுக கூட்டணியில்தான் இருக்கின்றனவே தவிர, இங்கு யாரும் அப்படி இல்லை!

இன்னும் வராத ஒன்றை "புலி வருது, புலி வருது" என்று பூச்சாண்டி காட்டும் வேலையைத்தான் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார். தன் ஆட்சியின் அவலங்களை இதைவைத்து மறைக்க நினைக்கும் ஸ்டாலினின் வழக்கமான மடைமாற்றும் அரசியலை தமிழ்நாட்டு மக்கள் இனியும் நம்பப் போவது இல்லை.

உண்மையில் தமிழ்நாட்டு மக்கள் தொகுதி மறுசீரமைப்பு குறித்தோ, ஹிந்தி திணிப்பு குறித்தோ தெளிவான மனநிலையில் இருக்கிறார்கள்.

ஆனால் தமிழகத்தில் நடக்கும் இந்த திருட்டு முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் மக்கள் அன்றாடம் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, அவமானம் சுமந்து, வேலைவாய்ப்பு இல்லாமல், தங்கள் வீட்டுப் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாமல்தான் அவதிப்படுகிறார்கள்!

ஸ்டாலின் அவர்களே, மடைமாற்று அரசியலை நிறுத்திவிட்டு, முதலில் உங்கள் ஆட்சியில் நடக்கும் ரௌடிசத்தையும் திருட்டுக்களையும் உருட்டுக்களால் அல்லாமல் களத்தில் நிவர்த்தி செய்வது எப்படி என்பது குறித்துப் பேசுங்கள்!" என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com