பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

பக்ரீத் பண்டிகை: சிவகங்கையில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிவகங்கையில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.

News image

பக்ரீத் பண்டிகையையொட்டி சிவகங்கை நேரு வீதியில் உள்ள வாலாஜா நவாப் பள்ளி வாசலில் சனிக்கிழமை சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள். - DPS

Updated On :7 ஜூன் 2025, 9:05 am IST

சிவகங்கை: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிவகங்கையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சனிக்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.

பக்ரீத் பண்டிகை, உலகமெங்கும் உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகிறது. இறைவனின் தூதரான இப்ராஹிம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்படுகிறது.

இறைவனின் தூதர் இப்ராஹிம் நபிகளின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகைகள் நடத்துவதோடு இந்த நாளில் புத்தாடை அணிந்தும், தங்கள் வீட்டிகளில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிட்டு அவற்றை மூன்று சம பங்குகளாகப் பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டாருக்கும், நண்பர்களுக்கும் மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்கள் தேவைகளுக்குப் பயன்படுத்துகின்றனர். அதனால் இதை ஈகைத் திருநாள் என்றும் அழைக்கின்றனர்.

பக்ரீத் பண்டிகையையொட்டி சிவகங்கை நகரில் நேருவீதியில் உள்ள வாலாஜா நவாப் பள்ளிவாசலில் சனிக்கிழமை காலை 7 மணிக்கு ஒன்று கூடிய நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். இதைப் போல், நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆதம் பள்ளிவாசல், ஹவ்வா பள்ளிவாசல், ரோஸ் நகர் அந்-நூர் பள்ளிவாசல், தக்வா பள்ளிவாசல் ஆகிய இடங்களில் நடைபெற்ற பக்ரீத் சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.