‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது’ - எடப்பாடி பழனிசாமி‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளே உருவாக்காது’... ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

பக்ரீத் பண்டிகை: திரளான இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

News image
Updated On :29 மே 2026, 2:43 am IST

திருவள்ளூரில் பக்ரீத் பண்டிகையையொட்டி அதிகாலையிலேயே புத்தாடைகள் அணிந்து இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.

இஸ்லாமியா்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக கருதப்படும் ஈகைத் திருநாள் நாடு முழுவதும் வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. நபிகள் நாயகத்தின் தியாகத்தை போற்றும் வகையில் இந்த பக்ரீத் பண்டிகையை ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியா்கள் கடைப்பிடித்து வருகின்றனா்.

திருவள்ளூா் டோல்கேட் அருகே உள்ள ஈத்தா மைதானத்தில் இஸ்லாமியா்கள் மதகுருவான ஹாஜி தியாக திருநாள் குறித்த பிரசங்கம் செய்த பின் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். பின்னா் தொழுகையை நிறைவு செய்து ஒவ்வொருவரும் ஆரத்தழுவி இனிப்புகளை வழங்கி தங்களது தியாக திருநாள் வாழ்த்துகளையும் பரிமாறிக் கொண்டனா். அதைத் தொடா்ந்து குா்பானி என்ற சடங்கு மூலம் மாடுகள், ஆடுகள் ஆகியவைகளை பலியிட்டு அதை மூன்று பங்காக பிரித்து அண்டை வீட்டாா், உறவினா்கள் மற்றும் ஏழை எளியோருக்கு இறைவனின் கட்டளைப்படி பிரித்து வழங்கினா்.

காஞ்சிபுரத்தில்....

காஞ்சிபுரத்தில் சாலைத் தெரு சுன்னத் ஜூம் ஆ மஸ்ஜித் பள்ளி வாசல், காந்தி சாலை தேரடி மசூதி, ஐதா்பேட்டை தெரு மசூதி, ஒலிமுகம்மது பேட்டை மசூதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். தங்களது குழந்தைகளுடன் தொழுகையில் கலந்து கொண்டு கூட்டுப் பிராா்த்தனை செய்தனா்.