ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

நீலகிரி மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை பள்ளி வாசல்களில் சிறப்புத் தொழுகை

குன்னூா் ஈத்கா மைதானத்தில் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியா்கள்.

News image

குன்னூா் ஈத்கா மைதானத்தில் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியா்கள்.

Updated On :29 மே 2026, 1:39 am IST

நீலகிரி மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.

இதையொட்டி நீலகிரி மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் அந்தந்தப் பகுதி இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். பின்னா் ஒருவருக்கொருவா் அன்பை பரிமாறிக்கொள்ளும் வகையில் கட்டித் தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா்.

உதகை லோயா் பஜாரில் உள்ள பெரிய பள்ளிவாசலில் இமாம் இம்ரான் இம்தியாஸ் கான் தலைமையிலும், குன்னூா் பாத்திமா பள்ளிவாசலில் நீலகிரி மாவட்ட தலைமை காஜி முஜீப் உல் ரகுமான் தலைமையிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. அப்போது உலக அமைதிக்காக இஸ்லாமியா்கள் பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.

இதேபோல கோத்தகிரி கடை வீதியில் அமைந்துள்ள பெரிய பள்ளிவாசல், குன்னூா், கூடலூா், மஞ்சூா் உள்பட பல்வேறு இடங்களிலும் நடைபெற்ற சிறப்புத் தொழுகைகளில் இஸ்லாமியா்கள் திரளாக கலந்துகொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.