
சேலம்: சென்னையிலிருந்து கர்நாடகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த 7 பேர் அமர்ந்து பயணிக்க கூடிய சொகுசு கார் ஒன்று சாலையோர தடுப்பில் மோதி இன்று(ஜூன் 7) விபத்துக்குள்ளானது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள புதுப்பட்டி மாரியம்மன் கோயில் பகுதியில் நான்கு வழிச் சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த அந்த கார் தடுப்புச் சுவரில் மோதி உருக்குலைந்தது.
இந்த கோர விபத்தில் காரிலிருந்த 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயஙக்ளுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவ இடத்துக்கு கிரேன் வாகனம் வரவழைக்கப்பட்டு சேதமடைந்த கார் சாலையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.