கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தஞ்சை: பத்து ரூபாய் டாக்டர் ரத்தினம் பிள்ளை காலமானார்!

தஞ்சையைச் சேர்ந்த பத்து ரூபாய் டாக்டர் ரத்தினம் பிள்ளை (96) உடல்நலக் குறைவால் காலமானார்!

News image
டாக்டர் ரத்தினம் பிள்ளை - DPS
Updated On :7 ஜூன் 2025, 8:20 am

DIN

ஏழைகளின் மருத்துவர் என்று போற்றப்பட்ட பத்து ரூபாய் டாக்டர் ரத்தினம் பிள்ளை(96) வயது மூப்பு காரணமாக இன்று காலை காலமானார்.

ஏழைகளின் மருத்துவராக இருந்து, 65,000க்கும் மேற்பட்ட சுகப் பிரசவம் பார்த்த அவருக்கு ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், மூன்று மகள்கள் உள்ளனர். கடந்த 1929ம் ஆண்டு பிறந்த ரத்தினம் பிள்ளை, 1959ம் ஆண்டு மருத்துவராக தனது பணியை துவங்கினார். அப்போது 2 ரூபாய்க்கு மருத்துவம்‌ பார்த்து இறுதி வரை 10 ரூபாய் வரை மட்டுமே கட்டணம் வாங்கினார்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகரில் பத்து ரூபாயில் ஏழைகளுக்கு வைத்தியம் பார்த்து வந்த பத்து ரூபாய் டாக்டர் என பலதரப்பட்ட மக்களாலும் போற்றப்பட்ட டாக்டர் ரத்தினம் பிள்ளை வயது முப்பு காரணமாக இயற்கை எய்தினார். இவர், டாக்டர் டி.கே. சுவாமிநாதனின் தந்தையாவார். மனித நேய பண்பாளர் என்று பலராலும் அழைக்கப்படுபவர்.

டாக்டர் ரத்தினம் பிள்ளை 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மருத்துவ வசதி இல்லாத அக்காலங்களில் எவ்வளவு பெரிய நோயாக இருந்தாலும் குறைந்த செலவில் அதனை சரி செய்து விடக் கூடிய திறமை வாய்ந்த மருத்துவராக இருந்து வந்தார்.

மேலும், இவர் எப்படிப்பட்ட சிக்கலான பிரசவமாக இருந்தாலும் ஆபரேஷன் செய்யாமல் மகப்பேறு மருத்துவம் பார்த்து ஏராளமான கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் செய்து மிகச்சிறந்த பெயரை இப்பகுதி மக்களிடையே பெற்றார்.

தொடர்ந்து இப்பகுதியில் ஏழை மக்களுக்கு பத்து ரூபாய் கட்டணம் மட்டுமே பெற்றுக் கொண்டு மருத்துவம் செய்து வந்த இவரை இப்பகுதி மக்கள் போற்றி வந்தனர்.

மத்திய அரசுக்கு உதவியவர்!

இந்தியா, சீனா போர் நடந்தபோது இந்திய அரசு போர் தளவாடங்கள் வாங்குவதற்கு போதுமான நிதி இல்லை. எனவே மக்கள் தங்களிடம் உள்ள பணம், நகை போன்றவற்றை அரசுக்கு கொடுத்து உதவுங்கள், 5 வருடம் கழித்து அவற்றைத் திருப்பி தந்துவிடுவதாக கூறிக் கேட்டுள்ளது. அப்போது தன் மகள்களின் திருமணத்துக்காக சேமித்து வைத்திருந்த 83 பவுன் தங்க நகையை மருத்துவர் ரத்தினம் பிள்ளை மத்திய அரசிடம் கொடுத்து, மீண்டும் மத்திய அரசு நகையை திரும்பி வழங்கியிருக்கிறது.

மனித நேயம்

கரோனா நேரத்தில் தனது கட்டடத்தில் இருந்த கடைகளுக்கு 3 மாத வாடகையை வியாபாரிகளிடம் வாங்காமல் மனித நேயத்துடன் நடந்துகொண்டார்.

இவரின் சமூக சேவையைப் பாராட்டி பல்வேறு சமூக நல அமைப்புகள் இவருக்கு மனிதநேய மருத்துவர் என்ற விருதுகளை வழங்கி கௌரவித்தனர். இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக டாக்டர் ரத்தினம் பிள்ளை இன்று இயற்கை எய்தினார் என்ற தகவல் கேட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து அவரது உடலுக்கு பலதரப்பட்ட மக்கள், உள்ளூர் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

டாக்டர் டி.ஏ.கே. ரத்தினம்பிள்ளை, சனிக்கிழமை காலை இயற்கை எய்தினார் என்றும், அவரது இறுதி ஊர்வலம் ஜூன் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் சீனிவாசபுரத்தில் உள்ள அவரது இல்லத்திலிருந்து தொடங்கி, நல்லடக்கம் நடைபெறவிருப்பதாகவும் குடும்பத்தினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.