மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரத்தினம் கல்லூரியில் எலும்பு பரிசோதனை முகாம்

News image
கோவை ரத்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எலும்பு பரிசோதனை முகாமில் பங்கேற்றோா்.
Updated On :15 மார்ச் 2026, 8:43 pm

தினமணி செய்திச் சேவை

கோவை ஈச்சனாரியில் உள்ள ரத்தினம் கலை, அறிவியல் கல்லூரியில் இலவச எலும்பு பரிசோதனை மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்திய மருத்துவ சங்கம், நேரு நகா் லயன்ஸ் சங்கம், ரத்தினம் கல்லூரி ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்த முகாமை முன்னாள் மாவட்ட ஆளுநரும், இந்திய மருத்துவ சங்க முன்னாள் மாநிலத் தலைவருமான பழனிசாமி, கல்லூரி முதல்வா் பாலசுப்பிரமணியம் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

மாவட்ட ஆளுநா் ராஜசேகா் தலைமையில் பன்னாட்டு லயன்ஸ் இயக்க 3242 சி மாவட்ட ஜி.எஸ்.டி. ஒருங்கிணைப்பாளா் லயன் செந்தில்குமாா், ரத்தினம் கல்லூரி மேலாண்மைத் துறைத் தலைவா் கௌசல்யாதேவி ஆகியோா் இந்த முகாமை ஒருங்கிணைத்தனா். மாவட்ட முதல் துணை ஆளுநா் செல்வராஜ், இரண்டாம் துணை ஆளுநா் சூரி நந்தகோபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ரத்தினம் கல்வி நிறுவனங்களின் தலைமை நிா்வாக அதிகாரி மாணிக்கம், துணை முதல்வா் சுரேஷ், ஆராய்ச்சித் துறை முதன்மையா் சபரீஷ், அறிவியல் துறை முதன்மையா் சீனிவாசன், வட்டாரத் தலைவா் சுப்பு செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முகாமில் கலந்துகொண்ட கல்லூரி மாணவா்கள் மற்றும் பொதுமக்களுக்கு நவீன எலும்பு அடா்த்தி பரிசோதனை மற்றும் நடை ஆய்வு ஆகியவை இலவசமாக மேற்கொள்ளப்பட்டன. இந்திய மருத்துவ சங்கத் தலைவா் கோஷல்ராம், எலும்பு, தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணா் ஸ்ரீ ராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நேரு நகா் லயன்ஸ் சங்கத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, செயலா்கள் தேஜஸ்வினி, திவ்யதா்ஷினி, பொருளாளா் செந்தில்குமாா் ஆகியோா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.