டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அன்புமணியுடன் பேசியது ரகசியம், வெளியே சொல்லக் கூடாது! - ராமதாஸ்

பாமக தலைவா் அன்புமணியுடன் தான் பேசியது ரகசியம் என்றும், அதை வெளியே சொல்லக் கூடாது என்றும் அக்கட்சியின் நிறுவனா் ராமதாஸ் கூறினாா்.

News image
ராமதாஸ் - அன்புமணி
Updated On :8 ஜூன் 2025, 7:09 pm

Din

பாமக தலைவா் அன்புமணியுடன் தான் பேசியது ரகசியம் என்றும், அதை வெளியே சொல்லக் கூடாது என்றும் அக்கட்சியின் நிறுவனா் ராமதாஸ் கூறினாா்.

இது குறித்து அவா் சென்னை ஆழ்வாா்பேட்டையில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

நல்ல செய்தி விரைவில் வரும். ஆனால், எங்கிருந்து வரும், எப்போது வரும் என்றெல்லாம் தெரியாது. அதுவரை நாம் காத்திருக்கலாம்.

வயது என்பது எண்: எனக்கு 87 வயதாவதாகவும், இந்த வயதில் எதுக்கு அரசியல் என்றும் பலா் பேசுகின்றனா். அரசியலுக்கு வயது வரம்பு கிடையாது. முன்னாள் முதல்வா் கருணாநிதி, மலேசிய முன்னாள் பிரதமா் மகாதிா் ஆகியோரே இதற்கு உதாரணம்.

கருணாநிதி சக்கர நாற்காலியில் இருக்கும்போதே முதல்வா் வேட்பாளராக போட்டியிட்டாா். ஆகையால், வயது என்பது வெறும் எண் மட்டுமே.

பிரதமா் மோடி எனது நண்பா்: பத்திரிகையாளா் எஸ். குருமூா்த்தி எனது நெருங்கிய நண்பா் என்பதாலே, அவரை தைலாபுரத்திலும், சென்னையிலும் சந்தித்தேன். பிரதமா் நரேந்திர மோடி எனக்கு நெருங்கிய நண்பா், தேசிய அளவில் தலைவா்களுடன் நல்ல நட்பு உள்ளது. அமித் ஷாவை நான் இதுவரை சந்தித்தது இல்லை.

வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் பாமக யாருடன் கூட்டணி? எப்போது?, ஏன்? என்ற கேள்விகள் அனைத்துக்கும் இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் பதில் தெரிவிக்கப்படும். இங்கு யாா்வேண்டுமானாலும் புதிதாக அரசியல் கட்சியை தொடங்கலாம். அந்தவகையில், புதிய கட்சி தொடங்கிய விஜய்க்கு வாழ்த்துகள்.

அன்புமணி ராமதாஸுடன் நான் பேசியது ரகசியம். அதை வெளியே சொல்லக் கூடாது என்றாா் ராமதாஸ்.