தென்காசி முதியோர் இல்லத்தில் 3 பேர் பலி! உணவு ஒவ்வாமை காரணமா?

தென்காசியில் தனியார் முதியோர் இல்லத்தில் 3 பேர் உயிரிழந்தது பற்றி...
தென்காசி முதியோர் இல்லத்தில் 3 பேர் பலி! உணவு ஒவ்வாமை காரணமா?
Published on
Updated on
1 min read

தென்காசியில் தனியார் முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமையால் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள சுந்தரபாண்டியபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் முதியோர் இல்லத்தில் 60-க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு உணவு சாப்பிட்டதும் சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோர் தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 11 பேரில் 3 பேர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காப்பக நிர்வாகி ராஜேந்திரனை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆதரவற்றோர் இல்லத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com