ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

தமிழகத்தில் பகல் 1 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் பகல் 1 மணி வரை 7 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிப்பு

News image
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Updated On :14 ஜூன் 2025, 5:36 am

DIN

சென்னை: தமிழகத்தில் இன்று பகல் 1 மணி வரை 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை மே மாத இறுதியில் தொடங்கி, ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் தீவிரமடைந்துள்ளது.

இதன் காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக, சென்னையிலும் பகல் நேரத்திலும், சென்னை புறநகர்ப் பகுதிகளில் இரவு நேரத்திலும் பலத்த மழை பதிவாகியிருக்கிறது.

இந்த நிலையில், பகல் 1 மணி வரை தமிழகத்தில் கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.