கடலூர்: ஏரியில் மூழ்கி பலியான இளைஞர்! முதல்வர் ரூ. 3 லட்சம் இழப்பீடு அறிவிப்பு!

கடலூரில் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் ரூ. 3 லட்சம் இழப்பீடு அறிவித்தார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின்
முதல்வர் மு.க. ஸ்டாலின்
Published on
Updated on
1 min read

கடலூர் மாவட்டம், பார்வதிபுரம் கிராமத்தில் ஏரியில் மூழ்கி, உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிக்கையில், கடலூர் மாவட்டம், வடலூர், பார்வதிபுரம் கிராமத்தில் வின்சென்ட் அமல்ராஜ் அந்தோணி என்பவரின் மகன் அப்டியல் டெவின் ரோஜர் (17), சனிக்கிழமை (ஜூன் 14) மாலை 5 மணியளவில், வெங்கலத்து ஏரியில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றபோது, எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு, மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 3 லட்சம் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... சொந்த மண்ணிலேயே அன்னியரைப் போல...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com