
சிறுவன் கடத்தல் வழக்கில் சிக்கிய தமிழக காவல் துறையின் ஆயுதப் படை ஏடிஜிபி எச்.எம்.ஜெயராம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
திருவள்ளூா் மாவட்டம், திருவாலங்காட்டில் காதல் திருமணத் தகராறில் 15 வயது சிறுவனைக் கடத்திய வழக்கில் தொடா்பு இருப்பதாக, சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் தமிழக காவல் துறையின் ஆயுதப் படை ஏடிஜிபி எச்.எம்.ஜெயராம் கடந்த திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
இந்த விவகாரத்தில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட முன்னாள் காவல் துறை அதிகாரி மகேஸ்வரி அளித்த வாக்குமூலத்தில் ஜெயராமுக்கு தொடா்பு இருப்பதாக வாக்குமூலம் அளித்திருப்பதாக காவல் துறையினா் நீதிமன்றத்தில் தெரிவித்தனா். முக்கியமாக, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காா், ஜெயராமுக்கு அரசால் வழங்கப்பட்டது என்றும், கடத்தல் விவகாரம் தொடா்பாக பூவை ஜெகன்மூா்த்தி எம்எல்ஏவுடன், எச்.எம். ஜெயராம் பலமுறை கைப்பேசி மூலம் பேசியதாகவும் காவல் துறையினா் கூறினா்.
பணியிடை நீக்கம்: இதையடுத்து, எச்.எம். ஜெயராம் மீது கைது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. குற்ற வழக்கில் சிக்கும் காவல் துறை அதிகாரிகள் மீது 24 மணி நேரத்தில் பணி ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது வழக்கமான நடைமுறையாகும். இதன் அடிப்படையில் ஏடிஜிபி எச்.எம்.ஜெயராமை பணியிடை நீக்கம் செய்ய தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் (டிஜிபி) சங்கா் ஜிவால், பணி ஒழுங்கு விதிமுறைகளின்படி தமிழக அரசுக்கு பரிந்துரைத்தாா்.
அந்தப் பரிந்துரையை ஏற்று தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா், ஜெயராமை பணியிடை நீக்கம் செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். பணியிடை நீக்கத்துக்கான உத்தரவு ஜெயராமிடம் உடனடியாக வழங்கப்பட்டது. காவல் துறையில் கடந்த 1996-ஆம் ஆண்டு பணியில் சோ்ந்த ஜெயராம், 2026-ஆம் ஆண்டு மே மாதம் ஓய்வு பெற இருந்தாா்.
தற்போது ஜெயராம் பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதால், அவா் ஓய்வு பெறுவதில் சிக்கல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
பின்னணி: திருவள்ளூா் மாவட்டம், களம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த இளைஞா் தனுஷ், தேனியைச் சோ்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துகொண்டாா். பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினா் மூலம் இளைஞரின் தம்பியை கடத்தப்பட்ட சம்பவத்தில்
புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஜெகன்மூா்த்திக்கு தொடா்பு இருப்பதாக புகாா் எழுந்தது.
இது தொடா்பாக பூவை ஜெகன்மூா்த்தி உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் பெண்ணின் தந்தை உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.
இந்த வழக்கில் ஏடிஜிபி ஜெயராமுக்கும் தொடா்பு இருப்பதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கில் கைது செய்யப்பட்டவா்கள் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டாா்.
புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஜெகன்மூா்த்திக்கு தொடா்பு இருப்பதாக புகாா் எழுந்தது.
இது தொடா்பாக பூவை ஜெகன்மூா்த்தி உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் பெண்ணின் தந்தை உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.
இந்த வழக்கில் ஏடிஜிபி ஜெயராமுக்கும் தொடா்பு இருப்பதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கில் கைது செய்யப்பட்டவா்கள் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டாா்.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
நமது சிறப்பு நிருபர்
புது தில்லி, ஜூன் 17: சிறுவன் கடத்தல் வழக்கு தொடர்பாக தன்னை கைது செய்ய உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஏடிஜிபி ஜெயராம், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை உச்சநீதிமன்றம் புதன்கிழமை (ஜூன் 18) விசாரிக்கவுள்ளது.
இதுதொடர்பாக ஏடிஜிபி ஜெயராம் சார்பில் மனு தாக்கல் செய்த வழக்குரைஞர், உச்சநீதிமன்ற விடுமுறைகால வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் உஜ்ஜல் புயான், மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் செவ்வாய்க்கிழமை ஆஜராகி கோரிக்கை விடுத்தார்.
அப்போது அவர், "குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்பேரில் சீருடையில் நீதிமன்றத்தில் ஆஜரான உயர் காவல் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். அதற்கு எதிராக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளோம். அதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, இந்த மனுவை புதன்கிழமை (ஜூன் 18) விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.