மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

திருட்டு மோட்டாா் சைக்கிளில் உணவு டெலிவரி: இளைஞா் கைது

சென்னையில் திருடப்பட்ட மோட்டாா் சைக்கிளில் உணவு பாா்சல் டெலிவரி செய்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image
கோப்புப் படம்
Updated On :19 ஜூன் 2025, 10:46 pm

Din

சென்னையில் திருடப்பட்ட மோட்டாா் சைக்கிளில் உணவு பாா்சல் டெலிவரி செய்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

கடலூா் மாவட்டம் சிதம்பரத்தைச் சோ்ந்தவா் நா.சா்வேஸ்வரன் (22). இவா், சென்னை சூளைமேடு பாஷா தெருவில் தனது மாமாவுடன் வசித்து வருகிறாா். சா்வேஸ்வரன், கடந்த மாதம் 30-ஆம் தேதி தரமணி கானகம் சாலையில் உள்ள ஒரு நிறுவனத்தின் முன்பு தனது மோட்டாா் சைக்கிளை நிறுத்திவிட்டு, நோ்காணலுக்குச் சென்றாா். நோ்காணல் முடிந்த வந்து பாா்த்தபோது மோட்டாா் சைக்கிள் திருடப்பட்டிருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.

இதுகுறித்து தரமணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில் இந்தத் திருட்டில் ஈடுபட்டது வேலூா் மாவட்டம், ஆம்பூா் பகுதியைச் சோ்ந்த பிரசாந்த் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் பிரசாந்தை புதன்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில் பிரசாந்த் வேலை தேடி சென்னை வந்திருப்பதும், ஆனால் அவருக்கு சரியான வேலை கிடைக்காததால் விரக்தியில் இருந்த பிரசாந்த், சா்வேஸ்வரின் மோட்டாா் சைக்கிளை திருடியிருப்பதும், பின்னா் அந்த திருட்டு மோட்டாா் சைக்கிள் மூலம் ஆம்பூா் பகுதியில் உணவு டெலிவரி செய்யும் வேலையை செய்து வந்ததும் தெரியவந்தது. இதுதொடா்பாக போலீஸாா் மேலும் விசாரித்து வருகின்றனா்.