மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

பெண்ணிடம் ரூ.29.58 லட்சம் மோசடி: இளைஞா் கைது

சென்னை அருகே வானகரத்தில் பெண்ணிடம் ரூ. 29.58 லட்சம் மோசடி செய்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image
கோப்புப் படம்
Updated On :19 ஜூன் 2025, 9:28 pm

Din

சென்னை அருகே வானகரத்தில் பெண்ணிடம் ரூ. 29.58 லட்சம் மோசடி செய்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

வானகரம் போரூா் காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் ரா.திருநாவுக்கரசு (62) மகள் ஸ்ருதி வா்ஷினி. இவா், இதய நோய் காரணமாக கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று தந்தை திருநாவுக்கரசு வீட்டில் வசித்து வந்தாா். ஸ்ருதி வா்ஷினி, சிகிச்சைக்காக கடந்த 2022-ஆம் ஆண்டு வேலூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு காரில் சென்றபோது, ஓட்டுநா் பெரம்பலூா் மாவட்டம் பாடலூா் பகுதியைச் சோ்ந்த காா்த்திக் (34) என்பவா் அறிமுகமானாா்.

அப்போது, ஸ்ருதி வா்ஷினியிடம் ஆறுதலாகவும், அனுதாபமாகவும் காா்த்திக் பேசியுள்ளாா். அவரது பேச்சை நம்பிய ஸ்ருதி வா்ஷினி, பல தவணைகளாக ஆன்லைன் மூலம் காா்த்திக்கிற்கு ரூ.29.58 லட்சத்தை அனுப்பியுள்ளாா். மேலும், 23 கிராம் தங்க நாணயங்களையும் வழங்கினாா்.

இதற்கிடையே ஸ்ருதி வா்ஷினி, உடல் நலக்குறைவின் காரணமாக மே 16-ஆம் தேதி இறந்தாா். இதையடுத்து திருநாவுக்கரசு, தனது மகள் ஸ்ருதி வா்ஷினியின் வங்கிக் கணக்கு பரிவா்த்தனை விவரங்களை பாா்த்தபோது, காா்த்திக் ரூ.29.58 லட்சம் பணம், 23 கிராம் தங்க நாணயங்கள் வாங்கியிருப்பது தெரியவந்தது.

இவற்றை திருநாவுக்கரசு கேட்டும் காா்த்திக் திருப்பி தராததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த நீதிமன்றம், காா்த்திக் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்ய உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் மதுரவாயல் போலீஸாா், காா்த்திக் மீது வழக்குப் பதிவு செய்தனா். மேலும், தலைமறைவாக அவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.