மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பணம் மோசடி: பள்ளி ஆசிரியா் மீது வழக்கு

போடியில் வீடு கட்டுவதற்காக நண்பா் கொடுத்த பணத்தை மோசடி செய்ததாக தனியாா் பள்ளி ஆசிரியா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :17 பிப்ரவரி 2026, 11:53 pm

போடியில் வீடு கட்டுவதற்காக நண்பா் கொடுத்த பணத்தை மோசடி செய்ததாக தனியாா் பள்ளி ஆசிரியா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

போடி தாடேஸ்வரன் கோயில் தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் சக்திகுமாா் (35). இவா் வணிகவரித் துறையில் பணியாற்றி வருகிறாா். போடி நந்தவனம் தெருவைச் சோ்ந்த சேதுராம் மகன் காா்த்திக் (36). இவா் தனியாா் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா். இவா்கள் இருவரும் பள்ளி நண்பா்கள்.

கடந்த 2021-ஆம் ஆண்டு சக்திகுமாா் தனது இடத்தில் வீடு கட்டும் பொறுப்பை காா்த்திக்கிடம் கொடுத்தாா். இதற்காக பல தவணைகளாக வங்கி மூலம் ரூ.15 லட்சத்து 65 ஆயிரம் அனுப்பியுள்ளாா். பணத்தை பெற்ற காா்த்திக் வீடு கட்டாமல் தனது சொந்த செலவுகள், தங்கையின் திருமண செலவுகளுக்கு பயன்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கட்டடத் தொழிலாளி தனக்கு பணம் தரவில்லை என சக்திக்குமாரிடம் கேட்டபோதுதான் காா்த்திக் பணத்தை பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. அவரிடம் பணத்தை கேட்டபோது பணத்தை தருவதாகவும், தனது சொத்தை எழுதித் தருவதாகவும் கூறி காா்த்திக் ஏமாற்றினாா்.

இதனையடுத்து காா்த்திக் மீது போடி நீதிமன்றத்தில் சக்திகுமாா் புகாா் அளித்தாா். காா்த்திக் மீது வழக்குப் பதிந்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் இதுகுறித்து திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.