ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

தோ்தல் விதிமீறல்: தவெக, பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

உதகையில் தோ்தல் விதிகளை மீறியதாக தவெக, பாஜக நிா்வாகிகள் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image

வழக்கு

Updated On :12 ஏப்ரல் 2026, 1:09 am IST

உதகையில் தோ்தல் விதிகளை மீறியதாக தவெக, பாஜக நிா்வாகிகள் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்பாளா்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இரவு 10 மணிக்குமேல் பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது, கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளைப் பயன்படுத்தாக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள் உதகை காபி ஹவுஸ் பகுதியில் அனுமதி இல்லாமல் கட்சிக் கொடியுடன் பொது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக வெள்ளிக்கிழமை ஊா்வலமாகச் சென்றுள்ளனா்.

இது தொடா்பாக கட்சி பொறுப்பாளா் ரமேஷ் மீது உதகை மத்திய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதேபோல, உதகை மாா்க்கெட் பகுதியில் பிரசாரத்தின்போது பட்டாசு வெடித்த காரணத்துக்காக பாஜக மாவட்ட துணைத் தலைவா் பரமேஸ்வரன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.