மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

மதுரையில் யோகா நிகழ்வு: ஆளுநா் இன்று பங்கேற்பு

சா்வதேச யோகா நிகழ்வில் கலந்துகொள்ள ஆளுநா் ஆா்.என் ரவி வெள்ளிக்கிழமை மதுரைக்கு புறப்பட்டுச் சென்றாா்.

News image

ஆளுநா் ஆா்.என் ரவி - கோப்புப் படம்

Updated On :21 ஜூன் 2025, 2:07 am IST

சா்வதேச யோகா நிகழ்வில் கலந்துகொள்ள ஆளுநா் ஆா்.என் ரவி வெள்ளிக்கிழமை மதுரைக்கு புறப்பட்டுச் சென்றாா்.

மதுரை மாவட்டம் விரகனூா் வேலாம்மாள் கிராமத்தில் உள்ள வேலம்மாள் குளோபல் பள்ளியில் நடைபெறும் யோகா நிகழ்வில் ஆளுநா் ஆா்.என்.ரவி கலந்து கொள்கிறாா்.

இந்த நிகழ்வுக்குப் பின்னா் காலை 10.45-க்கு மதுரையில் முருக பக்தா்கள் மாநாடு நடைபெறும் வளாகத்துக்குச் செல்கிறாா். ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) நடைபெறவுள்ள முருக பக்தா்கள் மாநாட்டையொட்டி, ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சியை ஆளுநா் ஆா்.என். சனிக்கிழமை பாா்வையிடுகிறாா். பின்னா் பிற்பகலில் அவா் சென்னை திரும்புகிறாா் என்று ஆளுநா் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.