"ஹிட் 3" பட கதை விவகாரத்தில் நடிகர் நானி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனது கதையை திருடி "ஹிட் 3" திரைப்படம் தயாரித்துள்ளதாக விமல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மனுவில் அவர், கடந்த 2022ம் ஆண்டு "ஏஜென்ட் 11" என்ற பெயரில் இதே கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்திருக்கிறேன்.
தன் கதையை மையமாக வைத்து ஹிட் 3 திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதால், இப்படத்தின் மூலம் கிடைத்த வருமானத்தில் 20 சதவீதத்தை தனக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என கோரியுள்ளார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது இம்மனு தொடர்பாக நடிகர் நானி, இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நெட்பிலிக்ஸ் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு சென்னை உயர்நீதிமன்றம் விசாரணையை ஜூலை 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இயக்குநர் குலனூர் இயக்கத்தில் நானி நடித்த 'ஹிட் 3' திரைப்படம் மே 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.