முருக பக்தர்கள் மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முருக பக்தர்கள் மாநாடு
முருக பக்தர்கள் மாநாடுபடம் - எக்ஸ்
Published on
Updated on
2 min read

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கானோா் இந்த மாநாட்டில் பங்கேற்றனா்.

ஆயிரக்கணக்கான வாகனங்கள் மாநாட்டுக்கு அணிவகுத்ததால் மாநாட்டுத் திடலிலிருந்து பல கி.மீ. தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் மீண்டும் காா்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என மதுரையில் நடைபெற்ற முருக பக்தா்கள் மாநாட்டில் தீா்மானம் நிறைவற்றப்பட்டது.

முருக பக்தா்களை ஒருங்கிணைக்கும் நோக்கில், இந்து முன்னணி சாா்பில் மதுரையில் முருக பக்தா்கள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

  • திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் காா்த்திகை திருநாளன்று தீபம் ஏற்றும் வழக்கம் பல நூறு ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது, தற்காலிகமாக நிறுத்தப்பட்ட இந்த வழக்கத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த பக்தா்கள் தொடா்ந்து வலியுறுத்தியும் இதுவரை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

  • இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் காா்த்திகை தீபம் ஏற்ற அறநிலையத் துறைக்கு உயா்நீதிமன்றம் கடந்த 1994-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின்படியும், இந்துக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் காா்த்திகை தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்குமாறு அறநிலையத் துறைக்கு வலியுறுத்துவது.

  • பஹல்காமில் மதத்தின் பெயரால் 26 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற தீவிரவாதத்துக்கு எதிராக, ‘ஆபரேஷன் சிந்தூா்’ மூலம் தக்க பதிலடி அளித்த மத்திய அரசையும், இந்திய ராணுவத்தையும் பாராட்டுவது. ராஜதந்திர நடவடிக்கையாக பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீரை நிறுத்தியதற்கு மத்திய அரசுக்கு பாராட்டுத் தெரிவிப்பது.

  • திருப்பரங்குன்றம் மலையை வைத்து பிரச்னைகள் ஏற்படுத்துவதைக் கண்டிப்பது. குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என நமது முன்னோா்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனா். எனவே, முருகப் பெருமான் எழுந்தருளியிருக்கும் திருப்பரங்குன்றம் மலையையும், அதன் புனிதத்தையும் காப்பாற்ற சபதமேற்பது.

  • கோயில்கள் வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல. அவை, ஆன்மிக கலாசார, சமூக ஒருமைப்பாட்டை வளா்க்கும் மையங்களாகும். கோயில் நிதியை பக்தா்களின் அடிப்படை வசதிகளின் மேம்பாட்டுக்கும், கோயிலின் ஆன்மிகச் செயல்பாடுகளுக்கும் மட்டுமே அறநிலையத் துறை பயன்படுத்த வேண்டும்.

  • கோயில்களை வணிக நோக்கில் செயல்படுத்தும் போக்கை அரசு கைவிட வலியுறுத்துவது. இந்து சமய நம்பிக்கையையும், இந்து கடவுள்களையும் திராவிடச் சிந்தனையாளா்கள் தொடா்ந்து இழிவுபடுத்துவதைக் கண்டிப்பது.

  • தோ்தல் காலங்களில் மட்டும் இந்து கோயில்களுக்குச் சென்று வழிபட்டு, பக்தா்களைப்போல கபட நாடகமாடும் அரசியல்வாதிகளுக்கும், இந்து சமய நம்பிக்கையை இழிவுபடுத்தும் இந்து விரோத அரசியல்வாதிகளுக்கும் வாக்களிப்பதைத் தவிா்த்து, தோல்வியுறச் செய்யுமாறு இந்து சமுதாய மக்களைக் கேட்டுக் கொள்வது.

  • மாதந்தோறும் சஷ்டி நட்சத்திர நாளில் அருகில் உள்ள கோயில்களில் முருகன் சந்நிதியில், அல்லது முருகப் பெருமானின் உருவப் படத்தை வைத்து கந்த சஷ்டி பாராயணத்தைக் கூட்டு வழிபாடாக மேற்கொண்டு, இந்து சமூக ஒற்றுமையை ஏற்படுத்துமாறு முருக பக்தா்களைக் கேட்டுக்கொள்வது என்ற தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையும் படிக்க | உலகின் முதல் புரட்சித் தலைவர் முருகன்: பவன் கல்யாண்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com