தீயசக்திகளை எதிர்த்து துணை நிற்க விஜய்க்கு தமிழிசை வாழ்த்து!

விஜய்யிக்கு வாழ்த்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன்.
தீயசக்திகளை எதிர்த்து துணை நிற்க விஜய்க்கு தமிழிசை வாழ்த்து!
Published on
Updated on
1 min read

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் பிறந்த நாளுக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன், தவெக தலைவர் விஜய்யிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழிசை செளந்தரராஜன் தன்னுடைய வாழ்த்துச் செய்தியில், "நாளைய தீர்ப்பு" - இல் ஆரம்பித்து "அழகிய‌ தமிழ் மகனாக" வலம் வந்து "திருப்பாச்சி"-இல் தங்கை பாசத்தையும் "சிவகாசி" இல் தாயின் அன்பையும் பிரதிபலித்து "துப்பாக்கி" ஏந்தி தீவிரவாதிகளை அழித்து தேச பக்தியை வெளிப்படுத்தி "வாரிசு" அரசியலை எதிர்த்தால் தனக்கு வந்த இன்னல்களிலிருந்து "சுறா"வாக நீந்தி "கில்லி" யாக வெற்றி கண்ட "தமிழன்" "ஜன நாயகன்" தம்பி விஜய் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். "புதிய கீதை" வழியில் தீயசக்திகளை எதிர்த்து நல்லது நடக்க துணை நிற்க வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: கமர்ஷியல் படங்களுக்கு மத்தியில் கவனம்பெறாமல் சென்ற கண்ணுக்குள் நிலவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com