தமிழகத்தில் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

தமிழகம் முழுவதும் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
55 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.
55 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.
Published on
Updated on
2 min read

தமிழகம் முழுவதும் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்களும் மாற்றப்பட்டுள்ளனர். 55 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்களும் மாற்றப்பட்டுள்ளனர். 55 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

திருப்பூர், பெரம்பலூர், நாமக்கல், விருதுநகர், மதுரை, திருச்சி, ஈரோடு, செங்கல்பட்டு, சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

மத்திய அரசு பணியிலிருந்து திரும்பிய இராஜேந்திர ரத்னூ, சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை (CRRT) மற்றும் சென்னை நதிகள் புனரமைப்பு நிறுவனம் (Chennai River Transformation Company Ltd.) ஆகியவற்றின் முதன்மைச் செயலாளர்/உறுப்பினர் செயலர் மற்றும் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஷில்பா பிரபாகர் சதீஷ் (இயக்குநர், சுற்றுலா மற்றும் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகம்), வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் அரசுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ச. விஜயகுமார் (கூடுதல் தலைமைச் செயலாளர்/தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியம் (TNUIFSL)), கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையர், நில சீர்திருத்தப் பணியிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

முனைவர் மா. வள்ளலார், இ.ஆ.ப., (ஆணையர், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை) சமூக சீர்திருத்தத் துறையின் அரசுச் செயலாளராக கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண் இயக்குநராக இருந்த பொ.சங்கர், உயர்கல்வித் துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். உயர்கல்வித் துறை செயலாளராக இருந்த சமயமூர்த்தி, மனிதவள மேலாண்மை துறை செயலாளர் பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

திருப்பூர் ஆட்சியராக இருந்த கிறிஸ்துதாஸ், சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூர் ஆட்சியராக இருந்த கிரேஸ் லால்ரிண்டிகி பச்சாவ், வருவாய் பேரிடர் மேலாண் துறை கூடுதல் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்

இணைப்பு
PDF
55 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - முழுவிவரம்
பார்க்க

நாமக்கல் ஆட்சியராக இருந்த உமா சிறப்பு திட்ட செயலாக்கத் துறை கூடுதல் செயலாளராகவும், விருதுநகர் ஆட்சியராக இருந்த வி.ப.ஜெயசீலன் சென்னை மாநகராட்சியின் இணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சங்கீதா, சமூக நலத் துறை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த பிரதீப் குமார் பேரூராட்சிகள் இயக்குநராகவும், ஈரோடு ஆட்சியராக இருந்த ராஜகோபால் சுன்கரா நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநராகவும், செங்கல்பட்டு ஆட்சியராக இருந்த அருண் ராஜ், பெரம்பலூர் ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் ஆட்சியராக நரணவாரே மனிஷ், திருச்சி ஆட்சியராக வெ.சரவணன், செங்கல்பட்டு ஆட்சியராக சினேகா, மதுரை மாவட்ட ஆட்சியராக கே.ஜே.பிரவீன் குமார், விருதுநகர் ஆட்சியராக சுகபுத்ரா, ஈரோடு ஆட்சியராக கந்தசாமி, நாமக்கல் ஆட்சியராக துர்கா மூர்த்தி, சிவகங்கை மாவட்ட ஆட்சியராக பொற்கொடி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க: ஈரானின் 6 விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்! புதினை சந்திக்கும் ஈரான் அமைச்சர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com