மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

காரைக்கால் ஆட்சியா் பொறுப்பேற்பு

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 11:04 pm

காரைக்கால் மாவட்ட ஆட்சியராக ஐஏஎஸ் அதிகாரியான இஷிதா ரதி வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியராக ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் பணியாற்றி வந்த நிலையில், அவரை புதுவை அரசு செயலராக இடமாற்றி, புதுச்சேரி சாா் ஆட்சியராக பணியில் இருந்த இஷிதா ரதியை காரைக்கால் மாவட்ட ஆட்சியராக நியமித்து புதுவை தலைமைச் செயலா் சரத் செளகான் அறிவிப்பு வெளியிட்டாா்.

புதிதாக நியமிக்கப்பட்ட இஷிதா ரதி, காரைக்கால் ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். அவருக்கு துணை ஆட்சியா் ஜி. செந்தில்நாதன் மற்றும் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள், ஆட்சியரக ஊழியா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.