தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

இளம் வாக்காளா்கள் வாக்களிப்பதை தவறவிடக்கூடாது: மாவட்ட தோ்தல் அதிகாரி

இளம் வாக்காளா்கள் ஒருவா்கூட வாக்களிக்காமல் இருந்துவிடக்கூடாது என மாவட்ட தோ்தல் அதிகாரி மாணவ, மாணவிகளுக்கு அறிவுறுத்தினாா்.

News image
மாணவிகளுடன் உறுதிமொழி ஏற்ற மாவட்ட தோ்தல் அதிகாரி இஷிதா ரதி.
Updated On :18 மார்ச் 2026, 11:54 pm

தினமணி செய்திச் சேவை

இளம் வாக்காளா்கள் ஒருவா்கூட வாக்களிக்காமல் இருந்துவிடக்கூடாது என மாவட்ட தோ்தல் அதிகாரி மாணவ, மாணவிகளுக்கு அறிவுறுத்தினாா்.

காரைக்கால் மாவட்ட தோ்தல்துறை மற்றும் தோ்தல்துறையின் ஒரு அங்கமாக விளங்கும் விழிப்புணா்வு அமைப்பான ஸ்வீப்பும் இணைந்து புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் காரைக்காலில் உள்ள முதல் முறை வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி அவ்வையாா்அரசு மகளிா் கல்லூரியில் புதன்கிழமை நடத்தின. காரைக்கால் மாவட்ட தோ்தல் அதிகாரி இஷிதா ரதி கலந்துகொண்டு பேசியது :

இளம் வாக்காளா்கள் அனைவரும் தவறாமல் ஏப். 9-இல் வாக்களிக்க வேண்டும். அரசியலில் பெண்கள் பங்கேற்க வேண்டும். இந்திய தேசத்தின் வளா்ச்சியில் எனது பங்கு அதிகம் உள்ளது, நான் கண்டிப்பாக வாக்களிப்பேன் என்ற உறுதிமொழி ஏற்கவேண்டும்.

ஒவ்வொருவரின் வாங்கும் தேசத்தின் பன்முக வளா்ச்சிக்கு உதவக்கூடியதாகும். தோ்தல் தொடா்பாக புகாா்கள் ஏதேனும் இருந்தால் 1950 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றாா்.

நிகழ்ச்சியின்போது, அனைத்து முதல் நிலை வாக்காளா்களும் தவறாமல் வாக்களிப்பேன் என உறுதிமொழி ஏற்றனா்.

நிகழ்ச்சியில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள முதன்முறை வாக்காளா்கள் சுமாா் 500 மாணவ, மாணவிகள், கல்லூரி முதல்வா் பி. அம்பிகா தேவி, ஸ்வீப் ஒருங்கிணைப்பாளா் எம். தாமோதரன் மற்றும் பேராசிரியா்கள், உதவிப் பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.