சேலம் : கொங்கு மண்டலத்தில் குழந்தைகளை வாங்கி விற்பனையில் ஈடுபட்டு வந்த 6 பேர் கொண்ட கும்பல் சேலத்தில் கைது செய்யப்பட்டனர்.
சேலம் நகர ஜோதிபட்டியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் 43. இவர் மீது பண மோசடி புகார் தொடர்பாக செவ்வாய்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் ஈரோட்டில் இருந்து ஆண் குழந்தையை வாங்கி வந்து சேலத்தில் விற்றதும் அதற்கு அவரது மனைவி நாகசுதா உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
அத்துடன் குழந்தையை வாங்கி கொடுத்த ஈரோட்டைச் சேர்ந்த பர்வீன் பானு, பத்மாவதி ஸ்ரீதேவி ஆகியோர் சேர்ந்து இதுவரை மோகன்ராஜ் மூலம் மூன்று குழந்தை விற்று இருப்பதும் மூன்று ஆண்டுகளாக குழந்தை விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் இன்று அதிகாலை மோகன்ராஜ், நாகசுதா, பர்வீன் பானு, பத்மாவதி, ஜனார்த்தனன் ஸ்ரீதேவி ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
இவர்களிடம் விசாரணை நடத்தியதில் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருப்பூர், கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட கொங்கு மண்டல பகுதிகளில் குழந்தை இல்லாத தொழிலதிபர்களுக்கு குழந்தைகளை ஏழை எளியவர்களிடமிருந்து சட்ட விரோதமாக வாங்கி பல லட்சங்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.
இவர்கள் இதுவரை கடந்த மூன்று ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகளை விற்றதையும் போலீசார் உறுதி செய்துள்ளனர்.
மேலும் இவர்கள் யார் யாருக்கெல்லாம் குழந்தையை விற்பனை செய்தனர்?யார் யாரெல்லாம் குழந்தையை வாங்கினர்? என்பது குறித்து பட்டியல் தயார் செய்து போலீசார் கிடுக்குபிடி விசாரணையை துவக்கியுள்ளனர்.
கொங்கு மண்டலத்தில் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சைபா் குற்ற வேலைக்காக வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்ட 4 இளைஞா்கள் மீட்பு: மோசடிக் கும்பல் கைது
இணையவழி மோசடி கும்பல் சிக்கியது: வங்கி ஊழியா் உள்பட 3 போ் கைது

ரூ. 12 ஆயிரத்துக்கு பெண் குழந்தை விற்பனை; 3 போ் கைது

தந்தைக்கும் குழந்தை வளா்ப்பு விடுப்பு அளிக்க சட்டம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


