
வேலூரில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.
வேலூர் அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனை வளாகத்தில் தரை மற்றும் ஏழு தளங்களுடன் 197 கோடியே 81 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அரசு வேலூர் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும், வேலூர் மாவட்டத்தில் 7 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 7 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான கூடுதல் கட்டடங்கள் மற்றும் 2 துணை சுகாதார நிலையங்களுக்கான புதிய கட்டடங்களை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்.
மாலை 5.30 மணிக்கு அணைக்கட்டு அருகே கெங்கநல்லூா் சந்தை மைதானத்தில் கட்டப்பட்டுள்ள ‘கலைஞா் அறிவாலயம்’ அறிவுசாா் நூலக கட்டடத்தையும், முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சிலையையும் திறந்து விட்டு, சாலை மாா்க்கமாக திருப்பத்தூருக்கு புறப்பட்டு செல்கிறாா்.
இரவு 7.30 மணியளவில் ஆம்பூரில் அவருக்கு அமைச்சா் எ.வ.வேலு தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இரவு 8 மணிக்கு திருப்பத்தூா் சென்றடையும் முதல்வா், அங்கு ஆட்சியா் அலுவலகம் அருகே நிறுவப்பட்டுள்ள கருணாநிதி சிலையையும் திறந்து வைக்க உள்ளாா்.
முதல்வா் வருகையையொட்டி வடக்கு மண்டல காவல் துறை தலைவா் (ஐஜி) அஸ்ராகாா்க் உத்தரவின்பேரில் வேலூா் சரக காவல் துணைத்தலைவா் (டிஐஜி) தேவராணி மேற்பாா்வையில் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் தலைமையில் வேலூா் மாவட்டத்தில் 1,500 போலீஸாரும், திருப்பத்தூா் மாவட்டத்தில் 2,000 போலீஸாரும் என மொத்தம் 3,500 போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிக்க: என்னுடன் இருப்பவர்களுக்கே தேர்தல் சீட்: ராமதாஸ் அறிவிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.