ஆக. 15 முதல் விஜய் சுற்றுப்பயணம்: எங்கிருந்து?

தவெக தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணம் குறித்து...
tvk leader Vijai - file photo
விஜய்file photo
Published on
Updated on
1 min read

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மக்களை சந்திப்பதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய் வரும் ஆக. 15 ஆம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

தவெக தலைவர் விஜய், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான செயல்பாடுகள், 2026 தோ்தலுக்கான களப்பணிகள் முன்வைத்து முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

விஜய் தவெகவின் வாக்குச்சாவடி முகவர்கள் முதல் தலைமை நிர்வாகிகள் வரை கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தி 2026 பேரவைத் தேர்தலில் களம்காண தயாராகவுள்ளார்.

அந்த வகையில், மாவட்ட வாரியாக செயலர்கள், ஒருங்கிணைப்பாளா்கள் உள்ளிட்ட நிா்வாகிகளை விஜய் நியமித்து வருகிறார்.

இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் வரும் ஆக. 15 ஆம் தேதி முதல் மக்களை சுற்றுப்பயணம் மூலம் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்க்கின்றன.

தஞ்சாவூரில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை விஜய் தொடங்கவுள்ளார். முதல்கட்டமாக 100 இடங்களில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் விஜய் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த அக்டோபர் மாதம் வெற்றிகரமாக நடைபெற்றது. மாநாட்டில் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: வேலூர் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை: முதல்வர் திறந்துவைத்தார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com