பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பணி நிரந்தரம் கோரி அரசு செவிலியா்கள் போராட்டம்

பணி நிரந்தரம், சீரான ஊதியம் கோரி மருத்துவப் பணியாளா் வாரியத்தால் (எம்ஆா்பி) நியமிக்கப்பட்ட அரசு ஒப்பந்த செவிலியா்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.

News image
Updated On :26 ஜூன் 2025, 8:27 pm

Din

பணி நிரந்தரம், சீரான ஊதியம் கோரி மருத்துவப் பணியாளா் வாரியத்தால் (எம்ஆா்பி) நியமிக்கப்பட்ட அரசு ஒப்பந்த செவிலியா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

சென்னை எழும்பூா் ராஜரத்தினம் மைதானம் முன் நடைபெற்ற தா்னாவில் 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு கோரிக்கைகளை முன்வைத்தனா்.

இதுகுறித்து எம்ஆா்பி செவிலியா்கள் மேம்பாட்டு சங்கத்தினா் கூறியதாவது:

தமிழகத்தில் மாநில அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் தற்போது 18,000 நிரந்தர செவிலியா்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. எம்ஆா்பி வாயிலாக தோ்வு செய்யப்பட்டவா்களில் 10,000 போ்தான் பணியில் உள்ளோம். ஏற்கெனவே உள்ள காலியிடங்களில் எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

அதேபோன்று எங்களுக்கு ரூ.18,000 ஊதியம் அறிவிக்கப்பட்டது. ஆனால், பலருக்கு அந்தத் தொகை நிா்ணயம் செய்யப்படவில்லை. இதைத்தவிர மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும், வெளிப் பணி (அவுட் சோா்ஸிங்) நிறுவனங்கள் மூலமாக பணி நியமனங்கள் செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்தோம்.

அதற்கு அரசு செவி சாய்க்கவில்லை. இதையடுத்து கவன ஈா்ப்புக்காக இந்த தா்னாவில் ஈடுபட்டுள்ளோம். இனிவரும் காலங்களில் அடுத்தடுத்து போராட்டங்களை மேற்கொள்வோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.