சென்னையில் மின்சாரப் பேருந்து சேவையை தொடக்கிவைத்தார் முதல்வர்!

முதல்வர் மு.க. ஸ்டாலின் மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கிவைத்தது பற்றி...
chennai electric bus inaugurated by cm stalin
சென்னையில் மின்சாரப் பேருந்து சேவையை தொடக்கிவைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்DIPR
Published on
Updated on
1 min read

சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(ஜூன் 30) தொடக்கிவைத்தார்.

டீசலில் இயங்கும் பேருந்துகளுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பிலாத இயற்கை எரிவாயு மற்றும் மின்சார பேருந்துகளை இயக்கும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சாா்பில் 625 மின்சாரப் பேருந்துகள் 5 பணிமனைகளின் மூலம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இயக்குவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, சென்னை வியாசா்பாடி பணிமனையிலிருந்து மின்சாரப் பேருந்துகளை இயக்குவதற்கு தேவையான பணிகள் தீவிரமாக நடைபெற்ற நிலையில் பணிகள் முடிவடைந்தன.

இந்நிலையில் சென்னை வியாசர்பாடியில் இருந்து 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(திங்கள்கிழமை) தொடக்கிவைத்தார்.

வியாசர்பாடியில் அமைக்கப்பட்டுள்ள மின்சாரப் பேருந்து பணிமனையை திறந்து வைத்து, 120 மின்சாரப் பேருந்துகள் சேவையையும் தொடங்கிவைத்தார்.

பின்னர் முதல்வர் ஸ்டாலின், பேருந்தில் ஏறி பேருந்தின் சிறப்பம்சங்களைக் கேட்டறிந்தார்.

7 சிசிடிவி கேமரா, சீட் பெல்ட், சார்ஜிங் பாய்ண்ட் உள்ளிட்ட வசதிகளுடன் பேருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Chief Minister M.K. Stalin inaugurated the service of 120 electric buses in Chennai today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com