
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | அரசியல், கொள்கை எதிரியைத்தவிர யார் வந்தாலும் அரவணைப்போம்: தவெக
The Chennai Meteorological Department has announced that there is a possibility of rain in 17 districts in Tamil Nadu, including Chennai, for the next 3 hours.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.