
சிதம்பரம் அருகே கிராம குளத்திற்குள் புகுந்த முதலையை வனத்துறையினர் இன்று (மார்ச் 2) மீட்டனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி.வக்கிரமாரி கிராமத்தின் மாரியம்மன் கோயில் குளத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலை ஒன்று புகுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த சிதம்பரம் வனச்சரக அலுவலர் கோ. வசந்த் பாஸ்கர் தலைமையில் சிதம்பரம் பிரிவு வனவர் கு. பன்னீர் செல்வம், சிதம்பரம் பீட் வனக்காப்பாளர் த. அன்புமணி ஆகியோர் அங்கு விரைந்து சென்று சுமார் 7 அடி நீளமுள்ள 50 கிலோ மதிக்கத்தக்க முதலையை பத்திரமாக பிடித்து அருகே உள்ள வக்காரமாரி நீர் தேக்க ஏரியில் பாதுகாப்பாக விட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.