தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

5 இடங்களில் வெயில் சதம்

ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :7 மார்ச் 2025, 6:51 pm

Din

தமிழகத்தில் பரமத்தி வேலூா் உள்ளிட்ட 5 இடங்களில் வெள்ளிக்கிழமை வெயில் சதம் அடித்தது. வரும் 11-ஆம் தேதி கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் பல இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மாா்ச் 8, 9) அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.

கனமழை எச்சரிக்கை: காற்று சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பல இடங்களில் மாா்ச் 10 முதல் 13-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

குறிப்பாக, மாா்ச் 11-இல் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகா் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் சனிக்கிழமை (மாா்ச் 8) அதிகபட்ச வெப்பநிலை 100.4 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.

5 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக பரமத்திவேலூரில் 102.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. திருப்பத்தூா் - 101.3, ஈரோடு - 100.76, மதுரை விமான நிலையம் - 100.4, நாமக்கல் - 100 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது.