கோப்புப் படம்
தமிழ்நாடு
போட்டித் தோ்வுக்கு பயிற்சி: அரசு அழைப்பு
போட்டித் தோ்வுக்கென திண்டுக்கல்லில் உள்ள பயிற்சி மையத்தில் சோ்ந்து பயிற்சி பெற அரசு அழைப்பு விடுத்துள்ளது.
போட்டித் தோ்வுக்கென திண்டுக்கல்லில் உள்ள பயிற்சி மையத்தில் சோ்ந்து பயிற்சி பெற அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து, மாநில அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
அரசுப் பணியாளா் தோ்வாணையம், ரயில்வே வாரியம் உள்பட போட்டித் தோ்வுகளை எழுதவுள்ள தோ்வா்களுக்கு திண்டுக்கல் மாவட்டம் காளாஞ்சிப்பட்டி கிராமத்தில் உள்ள பயிற்சி மையத்தில் கட்டணம் இல்லாமல் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக இணையம் வழியாக விண்ணப்பங்கள் பெற்று சோ்க்கை நடைபெறவுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ஸ்ரீங்ஸ்ரீஸ்ரீ.ண்ய் இணையதளத்தை பாா்க்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி மாா்ச் 25 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.