ஆளுநர் ஆர்.என். ரவி
ஆளுநர் ஆர்.என். ரவி கோப்புப் படம்

தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல்

தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் வழங்கியிருக்கிறார்.
Published on

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார்.

ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம் செய்வத தொடர்பான மசோதா மற்றும் கனிம வளம் நிறைந்த நிலப்பகுதிகளுக்கு வரி விதிப்பது உள்ளிட்ட இரண்டு மசோதாக்கள், ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டு நிலுவையில் இருந்த நிலையில், இன்று அந்த இரண்டு மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ஆளுநரிடன் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் மசோதாக்களை அவர் நிலுவையில் வைத்திருப்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், இரண்டு மசோதாக்களுக்கு இன்று ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ஆளுநர் ஆர்.என். ரவி
ஏழு ஆண்டுகளுக்கும் மேல் ஒரே செல்ஃபோன் எண்ணைப் பயன்படுத்துபவரா?

கனிம வளம் நிறைந்த நிலப்பகுதிகளுக்கு நில வரி வசூலிப்பது தொடர்பான சட்ட மசோதா, நீர்வளத்துறை அமைச்சகத்தால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

அதுபோல, தமிழகத்தில் உள்ள 28 மாவட்டங்களுக்கு, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் ஜனவரி 5ஆம் தேதியுடன் நிறைவு பெற்றதால், அந்த மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்வது தொடர்பான மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இவ்விரு மசோதாக்களும் ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த நிலையில், இவ்விரு மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்திருக்கிறார் ஆளுநர் ஆர்.என். ரவி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com