
பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி பணிகள் காரணமாக, மார்ச் 10ம் தேதி மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை சென்ட்ரல் - கூடூர் மார்க்கத்தில், பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக மார்ச் 10ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.
இதன் காரணமாக அந்த வழித்தடத்தில் 25 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பயணிகள் வசதிக்காக சென்னை சென்ட்ரல் - பொன்னேரி, மீஞ்சூர், எண்ணூர் இடையே 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே குறிப்பிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.