சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

முதல்வர் மருந்தகம்: பொதுமக்களுக்கு ரூ. 7.6 லட்சம் சேமிப்பு!

முதல்வர் மருந்தகம் திட்டத்தால் பொதுமக்களுக்கு ரூ. 7.6 லட்சம் சேமிக்கப்பட்டிருப்பதாகத் தமிழக அரசு தகவல்

News image

முதல்வர் மருந்தகம்

Updated On :8 மார்ச் 2025, 7:16 am

முதல்வர் மருந்தகம் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு ரூ. 7.6 லட்சம் சேமிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு செய்தி வெளியிட்டுள்ளது.

முதல்வர் மருந்தகம் திட்டம் தொடங்கப்பட்ட பிப்ரவரி 24 ஆம் தேதியிலிருந்து மார்ச் 3 ஆம் தேதிவரையில் ரூ. 27,42,829 மதிப்பிலான மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

தனியார் கடைகள் மூலம் ரூ. 13,73,449 மதிப்பிலும், கூட்டுறவு கடைகள் மூலம் ரூ. 13,69,380 மதிப்பிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் மூலம், 50 முதல் 75 சதவிகிதம்வரையில் குறைந்த விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதால், பொதுமக்களுக்கு ரூ. 7,68,776 சேமிப்பு ஏற்படுத்தப்பட்டதாக செய்தி மக்கள் தொடர்புத் துறை தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.