
ஒரு மாநிலத்துக்கு ஒதுக்க வேண்டிய கல்வி நிதியை, மாணவர்களின் கல்விக்காக செலவிட வேண்டிய தொகையை, அந்த மாநிலத்தைப் பழிவாங்குவதற்காக நிறுத்திவைத்து, பழிவாங்கும் கருவியாகப் பயன்படுத்துவது சரியானதா என்று திமுக மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது மாநிலத்தில் கல்வி பயிலும் மாணவர்களை அல்லவா பாதிக்கிறது என்றும் அவர் கேட்டுள்ளார்.
தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய கல்வி நிதி மறுக்கப்பட்டது தொடர்பாக மக்களவையில் இன்று காரசார விவாதம் நடைபெற்றது.
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால், மாநில அரசின் எதிர்காலத்தோடு மத்திய அரசு விளையாடுவதாகவும் தமிழச்சி தங்கபாண்டியன் கூறியுள்ளார். மேலும் அவர் பேசுகையில், நாட்டில் எந்தவொரு மாநிலத்திலாவது, மத்திய அரசின் கொள்கையை ஏற்க மறுத்ததற்காக நிதி ஒதுக்கீடு நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது என்பது
ரூ.2 ஆயிரம் கோடி தமிழக அரசுக்கு பிஎம்ஸ்ரீ பள்ளிகளுக்காக ஒதுக்கப்பட வேண்டிய நிதியானது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது கவலையை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த நடவடிக்கையானது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது அல்லவா.
ஒரு மாநில அரசின் கல்விக்காக ஒதுக்க வேண்டிய நிதியை நிறுத்திவைத்து, அதனை பழிவாங்கும் கருவியாக பயன்படுத்தலாமா? இங்கே தமிழக அரசுக்கு வர வேண்டிய நிதி வழங்கப்படும் என்று உங்களால் உறுதியளிக்க முடியுமா என்றும் தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பியிருந்தார்.