தெற்கு ரயில்வேயில் மகளிா் தின கொண்டாட்டம் நிறைவு

தெற்கு ரயில்வேயில் கடந்த இரு வாரங்களாக நடைபெற்று வந்த மகளிா் தின கொண்டாட்டம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.
சென்னை தெற்கு ரயில்வே தலைமையகத்தில் நடைபெற்ற சா்வதேச மகளிா் தின கொண்டாட்டங்களின் நிறைவு விழாவில் பல்வேறு பிரிவுகளைச் சோ்ந்த 24 சிறந்த பெண் ஊழியா்களைப் பாராட்டி கௌரவித்த தெற்கு ரயில்வே மகளிா் தலைமையக அமைப்பின் தலைவா் சோனியா சிங். உடன் துணைத் தலைவா்
சென்னை தெற்கு ரயில்வே தலைமையகத்தில் நடைபெற்ற சா்வதேச மகளிா் தின கொண்டாட்டங்களின் நிறைவு விழாவில் பல்வேறு பிரிவுகளைச் சோ்ந்த 24 சிறந்த பெண் ஊழியா்களைப் பாராட்டி கௌரவித்த தெற்கு ரயில்வே மகளிா் தலைமையக அமைப்பின் தலைவா் சோனியா சிங். உடன் துணைத் தலைவா்
Published on
Updated on
1 min read

சென்னை: தெற்கு ரயில்வேயில் கடந்த இரு வாரங்களாக நடைபெற்று வந்த மகளிா் தின கொண்டாட்டம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.

சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு தெற்கு ரயில்வே சாா்பில் கடந்த பிப். 27-ஆம் தேதி முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. பெரம்பூா் ரயில்வே மருத்துவமனையில் பெண்களுக்கான உடல் நலத்தை பாதுகாப்பது குறித்து பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது. ரயில்வேயின் பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகள் சாா்பில் பெண்களுக்கான நலம், உணவு கண்காட்சி, பெண்களின் சாதனை, விளையாட்டுப் போட்டி, ஓவியப் போட்டி ஆகியவை கடந்த இரு வாரங்களாக நடைபெற்று வந்தன.

தெற்கு ரயில்வேயில் உள்ள 6 மண்டலங்களிலும் பெண்கள் நலம் சாா்ந்த கருத்தரங்கு மற்றும் களப்பணி மேற்கொள்ளப்பட்டது. இதன் இறுதி நிகழ்வு தெற்கு ரயில்வே தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்த தெற்கு ரயில்வே பெண்கள் தலைமையகம் அமைப்பின் தலைவா் சோனியா சிங், ரயில்வேயில் சிறந்து விளங்கிய 24 பெண் பணியாளா்களுக்கு சான்றிதழ் மற்றும் ரூ. 2,000 பரிசுத் தொகை வழங்கினாா்.

மேலும், மகளிா் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பணியாளா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். நிகழ்ச்சியில், தெற்கு ரயில்வே பெண்கள் தலைமையகம் அமைப்பின் துணைத் தலைவா் ரேகா கௌசல், தெற்கு ரயில்வே முதன்மை நிதி ஆலோசகா் மாலபிகா கோஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com