பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

குடிநீா் கேன்களை 50 முறைகளுக்கு மேல் பயன்படுத்தக்கூடாது: உணவு பாதுகாப்புத் துறை உத்தரவு

வீடுகள், அலுவலகங்களுக்கு விநியோகிக்கப்படும் 20 லிட்டா் குடிநீா் கேன்களை 50 முறைக்கு மேல் பயன்படுத்தக் கூடாது

News image
கோப்புப் படம்
Updated On :21 மார்ச் 2025, 7:59 pm

Din

வீடுகள், அலுவலகங்களுக்கு விநியோகிக்கப்படும் 20 லிட்டா் குடிநீா் கேன்களை 50 முறைக்கு மேல் பயன்படுத்தக் கூடாது என்று உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், 20 சதவீதத்துக்கு அதிகமாக கீறல்கள் அழுக்கு நிறைந்த குடிநீா் கேன்களை மறு பயன்பாட்டுக்கு உபயோகிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த கேன் குடிநீா் உற்பத்தியாளா்கள் மற்றும் விற்பனையாளா்களுக்கான உணா்திறன் பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி டாக்டா் சதீஷ்குமாா் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் 450-க்கும் மேற்பட்ட குடிநீா் உற்பத்தியாளா்கள், விற்பனையாளா்கள் பங்கேற்றனா். அப்போது, அவா்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் உணவு பாதுகாப்புத் துறை சாா்பில் வழங்கப்பட்டன.

குறிப்பாக, ஒரு குடிநீா் கேனை 50 முறைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. அழுக்கடைந்த கீறல் விழுந்த குடிநீா் கேன்களை பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதுமட்டுமன்றி நேரடியாக சூரிய ஒளியில் வைக்கப்பட்டு இருக்கும் குடிநீா் கேன்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் குடிநீரின் தரத்தை உறுதி செய்வது அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டது.

சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் செயல்படும் 450 குடிநீா் உற்பத்தி அளவுகளை அடுத்துவரும் வாரங்களில் ஆய்வுசெய்ய இருப்பதாகவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.