
ரயில்வே திட்டங்களுக்கான நிதியில் தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 14 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்றைய அவை நிகழ்வில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு,
"மத்திய அரசின் நிதிநிலை அறிக்கைக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கைக்கும் வேறுபாடு உள்ளது. ஏனெனில் மத்திய அரசின் பட்ஜெட், பிகார், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான பட்ஜெட்டாக இருக்கிறது.
இதையும் படிக்க | பரிசீலனையில் புதிய ரேஷன் அட்டைகள்! - அமைச்சர் முக்கிய தகவல்
உதாரணத்திற்கு ரயில்வே திட்டங்களுக்காக மத்திய அரசு கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கிய நிதியை, உத்தரப் பிரதேசத்திற்கு ஒரே ஆண்டில் ஒதுக்கியுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் ரயில்வே திட்டங்களுக்கு தமிழகத்திற்கு ரூ. 19,608 கோடிதான் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசின் நிதியுதவி இல்லாமல் தமிழ்நாடு அரசு தனது சொந்த நிதியைக் கொண்டு செயல்படுத்தத் தொடங்கியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தில்லி சென்று பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்திய பிறகுதான் மத்திய அரசு நிதி வழங்கியது" என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.