பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.71 ஆக நிறைவு!சென்செக்ஸ், நிஃப்டி ஏற்றத்துடன் நிறைவு!!காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்புதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு! மாலை நிலவரம்! (ஆக.21)

'எம்எல்ஏக்களே பொறாமைப்படும் அளவிற்கு தரமான மடிக்கணினி வழங்கப்படும்' - அமைச்சர் தங்கம் தென்னரசு

கல்லூரி மாணவர்களுக்கு ரூ. 20,000 என்ற மதிப்பில் தரமான மடிக்கணினி வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு

Published On :21 மார்ச் 2025, 1:08 pm IST

கல்லூரி மாணவர்களுக்கு ஒரு மடிக்கணினி ரூ. 20,000 என்ற மதிப்பில் தரமான மடிக்கணினி வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் கூறியுள்ளார்.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 14 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்றைய அவை நிகழ்வில், திமுக அரசில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படவுள்ள மடிக்கணினியின் தரம் பற்றி அதிமுக எம்எல்ஏ தங்கமணியின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு,

"அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி அல்லது டேப் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற கணக்கின்படி ஒரு மடிக்கணினியின் விலை ரூ. 10,000 என்று அதிமுகவினர் கூறுகின்றனர்.

இந்த நிதி ஓராண்டுக்குத்தான். அடுத்த ஆண்டும் ரூ. 2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். எனவே, சராசரியாக ஒரு மடிக்கணினியின் மதிப்பு ரூ. 20,000 என்ற அளவிலே இருக்கும். அதனால் மடிக்கணினியின் தரம் குறித்த கவலை நிச்சயமாக உங்களுக்குத் தேவையில்லை.

மாணவர்கள் விரும்பி அந்த மடிக்கணினியைப் பயன்படுத்தும் அளவிற்கு தரமான மடிக்கணினி வழங்கப்படும்.

சட்டப்பேரவை உறுப்பினர்களே பொறாமைப்படக்கூடிய வகையில் அனைத்து உள்ளடக்கங்களுடன் மாணவ, மாணவிகளுக்கு தரமான மடிக்கணினிகள் வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.