2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

பரிசீலனையில் புதிய ரேஷன் அட்டைகள்! - அமைச்சர் முக்கிய தகவல்

புதிய குடும்ப அட்டைகள் வழங்குவது பற்றி சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்

அமைச்சர் சக்கரபாணி

Published On :

புதிய குடும்ப அட்டை வழங்குவதற்கு 51,327 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு அட்டைகள் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைய அவை நிகழ்வில் கேள்வி நேரத்தில், 'தமிழகத்தில் ரேஷன் கடைகளில் எத்தனை புகார்கள் வந்திருக்கின்றன? அதேபோல எத்தனை ரேஷன் அட்டைகள் கொடுக்கப்பட்டுள்ளன?' என எம்எல்ஏ ராஜேஷ்குமார் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்துப் பேசிய உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி,

"தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் புகார் பெட்டிகள் வைக்கப்படும், ஏற்கெனவே ரேஷன் கடைகளில் புகார் பதிவேடு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இணையதளம் மூலமாகவும் தொலைபேசி புகார் எண்ணிலும் புகார் அளிக்கலாம்.

திமுக ஆட்சியில் புதிதாக 3,000- க்கும் மேற்பட்ட நியாய விலைக்கடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

திமுக ஆட்சி அமைந்தவுடன் 18,09,677 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது மொத்தமாக 2 கோடியே 25 லட்சத்து 59 ஆயிரத்து 224 குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன.

51,327 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு புதிய அட்டைகள் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் புதிய குடும்ப அட்டை பெற 1,67,795 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது. அதுவும் விரைவாக பரிசீலனை செய்து வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.