கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

46,000 பேருக்கு புதிய ரேஷன் அட்டைகள் தயார்! விரைவில் விநியோகம்!

46,000 பேருக்கு புதிய ரேஷன் அட்டைகள் விநியோகம் செய்யப்படவுள்ளது பற்றி....

News image

கோப்புப் படம் - ENS

Updated On :15 ஜூன் 2026, 3:32 pm IST

தமிழகத்தில் 46,000 பேருக்கு புதிய ரேஷன் அட்டைகள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக உணவுப்பொருள் வழங்கல் துறை கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் கடந்த ஜனவரி முதல் சுமார் 2.25 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில், தற்போது முதற்கட்டமாக 46,000 பேருக்கு வழங்கப்பட உள்ளன.

இதற்காக ரேஷன் கார்டுகள் அச்சிடப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இதனை முதல்வர் ஜோசப் விஜய் விரைவில் தொடக்கிவைப்பார் என்றும் கூறப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக 46,000 புதிய ரேஷன் அட்டைகள் விநியோகம் செய்ய தயாராக உள்ளதாகவும் தகுதியானவர்கள் அனைவருக்கும் விரைவில் வழங்கப்படும் என்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ரேஷன் கார்டுக்கு வீட்டிலிருந்தேபடியே ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கவும் திருத்திக்கொள்ளவும் முடியும்.

அண்மையில் செய்தியாளர்களுடன் பேசிய உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் மிக விரைவில் ரேஷன் கார்டு வழங்கப்படும் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

New ration cards ready for 46,000 people will be Distributed soon

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.