தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

மதுரை ரெளடி கொலை: 2 தனிப்படைகள் அமைப்பு!

மதுரையில் ரெளடி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக...

கோப்புப்படம்

Published On :

மதுரை ரெளடி காளீஸ்வரன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் தனக்கன்குளத்தைச் சேர்ந்த ரெளடி காளீஸ்வரன், நேற்றிரவு வீட்டின் வெளியே வந்தபோது 3 பைக்களில் வந்த மர்ம நபர்கள் அரிவாளால் காளீஸ்வரனை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் காளீஸ்வரன் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், இவ்வழக்கு தொடர்பாக மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 2 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடும் பணியில் மதுரை மாநகர காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

ரெளடி காளீஸ்வரன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மதுரையில் ரெளடி காளீஸ்வரன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.