இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

வக்ஃப் மசோதாவுக்கு எதிராக தீர்மானம் தாக்கல்!

வக்ஃப் மசோதாவுக்கு எதிராக தமிழக பேரவையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டிருப்பது பற்றி...

News image
முதல்வர் மு.க. ஸ்டாலின்
Updated On :27 மார்ச் 2025, 5:22 am

DIN

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனித் தீர்மானம் தாக்கல் செய்துள்ளார்.

நாடு முழுவதும் ‘வக்ஃப்’ வாரிய சொத்துளை ஒழுங்குபடுத்த வழிவகுக்கும் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் கடந்த ஆகஸ்டில் அறிமுகம் செய்யப்பட்டது. எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்பைத் தொடா்ந்து மசோதாவை ஆய்வு செய்த நாடாளுமன்ற நிலைக் குழு, 655 பக்க அறிக்கை தயாரித்தது.

இதில் சில திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் இந்த மசோதா தாக்கலாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், வக்ஃப் மசோதாவுக்கு எதிராக தனித் தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

அவரைத் தொடர்ந்து, சட்டப்பேரவை கட்சிகளின் உறுப்பினர்கள் தீர்மானத்தின் மீதான தங்களின் நிலைபாட்டை தெரிவித்து, பின்னர் வாக்கெடுப்பின் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.